உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வினேஷை மறக்காதீங்க: சொல்கிறார் நீரஜ் சோப்ரா

வினேஷை மறக்காதீங்க: சொல்கிறார் நீரஜ் சோப்ரா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'பதக்கம் வாங்கவில்லை என்றாலும், நாட்டுக்காக வினேஷ் போகத் செய்ததை யாரும் மறந்துவிட வேண்டாம்' என இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தெரிவித்தார். 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் மகளிர் 50 கிலோ எடை பிரிவு மல்யுத்தத்தில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்தப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரி, அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளது.

நீரஜ் சோப்ரா சொல்வது என்ன?

இந் நிலையில் ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவும், வினேஷ் போகத்திற்கு ஆதரவு அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: வினேஷ் போகத் பதக்கம் வென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

மறக்க கூடாது...!

இப்படி ஒரு நிலை வராமல் இருந்திருந்தால் அவருக்கு பதக்கம் கிடைத்திருக்கும். பதக்கங்களை வென்றால் நம்மை சாம்பியன் என்று அழைப்பார்கள். வாங்காதவர்களை மக்கள் எளிதில் மறந்துவிடுவார்கள். பதக்கம் வாங்கவில்லை என்றாலும், நாட்டுக்காக வினேஷ் போகத் செய்ததை யாரும் மறந்துவிட வேண்டாம் இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Devaraj Venkatasamy
ஆக 12, 2024 20:33

அவ்ளோ ரிஸ்க் எடுத்தும் 100கி கொறயல னு தெரிஞ்சதும் அந்த முடிய கட் பன்னிருந்த லிமிட் குள்ள வந்திருக்கும்


VT Tech Tamil
ஆக 12, 2024 10:35

சதி என்று வந்துவிட்டால் யாரும் சிறியவர், பெரியவர் கிடையாது.


swega
ஆக 11, 2024 22:13

தம்பி, இன்னும் பத்து வருஷத்தில் உன்னையே யாருக்கும் தெரியாது. இதுதான் அனைவரின் நிலைமையும். மொஹிந்தர் அமர்நாத் யாரென்று கேட்டால் நூத்துக்கு தொன்னுத்தி ஒன்பது பேருக்கு தெரியாது. நாங்க எதுக்காக போகத்தை மறக்காம இருக்கணும்?


VT Tech Tamil
ஆக 12, 2024 10:40

நல்லவர்களை, திறமையானவர்களை காலம் எப்போதும் மறக்காது. நாம் தான் இவர்கள் போன்றோர்களை வலுக்கட்டாயமாக மறக்கடிக்கிறோம்.


sundarsvpr
ஆக 11, 2024 14:26

மயிரிழையில் தப்பினார் என்றால் அப்போதுகூட ஆண்டவனை நினைப்பதில்லை. தப்பவில்லையென்றால் விதி என்கிறோம். மயிரிழையில் தப்பினவன் இதுமாதிரி தவறை தவிர்ப்பான். கோப்பை பெற்றவன் கெட்டிக்காரன் என்று கருதமுடியாது. 100 மீட்டர் ஓட்டத்தில் முதலாவதாக வருபவன் எல்லைக்கோட்டை தொட்டு தாண்டும்போது பின்னால் வருபவன் எல்லை கோட்டை தொடுகிறான். ஒரு சொடுக்கு தாமதம். இதுதான் ஆண்டவன் அருள். வில்லுக்கு விஜயனை விட பலசாலிகள் எதிர் வரிசையில் இருந்தாலும் வென்றது விஜயன். காரணம் அருகில் பரமாத்மா ஆண்டவன் அருள் உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள். பகவத் சிந்தனையுடன் நம் திறமை இருக்கவேண்டும்.


VT Tech Tamil
ஆக 12, 2024 10:38

அப்படின்னா, இப்ப வினேஷ் தோற்றதற்கு கடவுள் அருள் மட்டும் இல்லை தலைமையின் அருளும் இல்லை என்று வச்சுக்கலாம்ல?


P. VENKATESH RAJA
ஆக 11, 2024 14:01

பதக்கம் வாங்கி தந்தால் நன்றாக இருந்திருக்கும்... பதக்கம் வாங்காதது தான் வருத்தம்


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி