உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: தடுக்க உ.பி., மகளிர் ஆணையத்தின் புது ஐடியா

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: தடுக்க உ.பி., மகளிர் ஆணையத்தின் புது ஐடியா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லக்னோ: உ.பி.,யில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க அவர்களின் ஆடைகளை ஆண்கள் தைக்கக்கூடாது. சலூன்களில் பெண்களுக்கு பெண்களே முடி திருத்தம் செய்ய வேண்டும் என அம்மாநில மகளிர் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் கடந்த 28 ம் தேதி ஆலோசனை செய்து மாநில அரசுக்கு பல பரிந்துரைகளை அளித்துள்ளது. அதன் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.இது தொடர்பாக அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஹிமானி அகர்வால் கூறியதாவது: பெண்கள் அணியும் ஆடைகளை ஆண்கள் தைக்கக்கூடாது. இதற்காக பெண்களை அளவு எடுக்கும் பணிகளில் ஆண்கள் ஈடுபடுத்தக்கூடாது. பெண்கள் மட்டுமே இத்தகைய பணிகளில் ஈடுபட வேண்டும். அந்த இடங்களில் சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட வேண்டும் என தலைவர் பபிதா சவுகான் முன்மொழிந்தார். இதனை மற்றவர்கள் ஆதரித்தனர்.அதேபோல் முடி திருத்தும் நிலையங்களில், பெண்களுக்கு பெண்கள் மட்டுமே முடி திருத்தும் பணிகளில் ஈடுபட வேண்டும். இத்தகைய பணிகளில் ஈடுபடும் ஆண்களில் சிலர் பெண்களை பாலியல் சீண்டல் செய்வதாக தகவல் வந்தது. அவர்கள் பெண்களை தவறான நோக்கத்துடன் தொடுகின்றனர். அவர்களின் எண்ணமும் சரியாக இல்லை. இது குறித்து உரிய சட்டத்தை இயற்றும்படி மாநில அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sudha
நவ 08, 2024 20:33

பெண்களுக்கு பெண் டாக்டர்கள் சிகிச்சை தர வேண்டும், பெண் ஆசிரியைகள் பாடம் எடுக்க வேண்டும், அதற்கு பெண் படிக்க வேண்டும்.4 வது மனைவியாக 8 பிள்ளைகள் பெறக்கூடாது


Raj S
நவ 08, 2024 19:08

தீர்ப்புகள் விரைவாகவும் கடுமையாகவும் இருக்கும் வரை இதை தடுக்க முடியாது... இந்த மாதிரி நடவடிக்கை ஒட்டுமொத்த ஆண்களை இழிவு படுத்துவதாகவும் அவர்களின் வேலை வாய்ப்பை பாதிப்பதாகவும் உள்ளது... பெண்களால் பெண்களுக்கு நிறைய பாலியல் கொடுமை நடக்கிறது... அதுக்கு என்ன பண்ணலாம்??


என்றும் இந்தியன்
நவ 08, 2024 16:42

பெண்கள் பஸ்ஸில் பெண் கண்டக்டர்கள் பெண் டிரைவர்கள் தான் இருக்கவேண்டும். பெண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் தான் இருக்கவேண்டும்............................. இதைப்போல இன்னும் நிறைய இருக்கின்றது. இதற்கு ஒரே தீர்வு "பாலியல் துன்பம் செய்தால் ஆணுறுப்பு அறுபடும்" என்று ஒரு சிறிய சட்டம் கொண்டு வந்தால் போதும் எல்லாம் அடங்கி விடும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 08, 2024 18:33

மாண்புமிகு நமது கோர்ட்டுகள் மாண்புமிகு நீதிபதிகள் மாண்புமிகு வக்கீல்கள் இவர்களை நம்பி எந்த சட்டமும் கொண்டு வந்தாலும் வேஸ்ட்.. இவர்கள் வழக்காடி தீர்ப்பு வருவதற்குள் குற்றவாளி கிழவனாகி விடுவார். இறுதி தீர்ப்பு வரும் வரை என்றும் போல் குற்றவாளி ஜாலியாக இருப்பார். வெட்கம் மானம் ரோசம் இல்லா காவல் துறை, நீதித்துறை நிறைந்த பாரத தேசம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை