உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஐ.டி.ஐ., மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை; கேரள அரசின் அட்டகாசமான அறிவிப்பு

ஐ.டி.ஐ., மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை; கேரள அரசின் அட்டகாசமான அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: கேரளாவில் ஐ.டி.ஐ., பயிலும் மாணவிகளுக்கு மாதத்தில் இரு தினங்கள் மாதவிடாய் விடுமுறையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.மாதவிடாய் சமயங்களில் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சந்திக்கும் சிரமங்களில் இருந்து விடுபடுவதற்காக, மாதவிடாய் விடுமுறை, இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே கொண்டு வரப்பட்டது. பீகார், ஒடிசா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கப்படுகிறது. குறிப்பாக, கேரளாவில் உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறையை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து அம்மாநில அரசு கட்டாயமாக்கியது. இந்த நடவடிக்கைக்கு வரவேற்புகள் குவிந்தன.இந்த நிலையில், ஐ.டி.ஐ., பயிலும் மாணவிகளுக்கு மாதத்தில் இருநாட்கள் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக பொது கல்வி மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவன்குட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில்; பல துறைகளில் சாதித்து வரும் பெண்களின் நலன் கருதி, ஐ.டி.ஐ.,யில் பயிற்சி பெற்று வரும் மாணவிகளுக்கு மாதத்தில் இரு தினங்கள் மாதவிடாய் விடுமுறை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சனிக்கிழமை விடுமுறை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறை நாட்களை குறுகிய கால படிப்புகள் அல்லது திறன் வளர்ப்பு சார்ந்த நிகழ்வுகளில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, ஐ.டி.ஐ.,யின் பயிற்சி நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முதல் ஷிப்ட் காலை 7.30 மணி முதல் 3 மணி வரையிலும், 2வது ஷிப்ட் காலை 10 மணி முதல் மாலை 5.30 வரையிலும் நடக்கும், என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

jayvee
நவ 29, 2024 17:19

இதுதான் கம்யூனிஸ்டுகளின் முரன்பாடு ..அய்யப்பன் கோவிலுக்கு இரண்டு கம்யூனிஸ்ட் கிருத்துவர்களை அனுமதித்த கேரளா அரசுக்கு மாதவிடாய் தீட்டாக தெரியவில்லை .. இப்போது கேரளாவில் பிஜேபி யின் வாக்கு வங்கி உயர்வு மற்றும் மீண்டும் காங்கிரஸின் வளர்ச்சியை கண்டு பயந்து இதுபோல வேலைகளை செய்கிறது


Ram pollachi
நவ 29, 2024 16:31

புயல் , மழை, என்றால் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்குவார்கள் அதனுடன் மாதவிடாய் சேர்ந்துவிட்டது... வீட்டுக்கும் விலக்கு, பள்ளிக்கும் விலக்கு அப்ப எங்க தான் போவது? போன மாதம் குளிச்ச தேதி பேபிக்கு தெரியாது ஆனால் கூடவே சுற்றும் நண்....கு தெரியும்.பத்து வயதில் ஆரம்பித்து நாற்பது வயதில் நின்று விடும் . கண்டதை வாங்கி தின்று உடல் பருமனாகி வருடம் இரண்டு, மூன்று என மாதவிடாய் சுருங்கி விட்டது. பலருக்கு குழந்தை பிறப்பு எட்டாக்கனி ஆகிவிட்டது. அதனால் தான் சோதனை குழாய் மருத்துவமனைகள் பட்டி தொட்டி எல்லாம் கொடிகட்டி பறக்கிறது.


sankaran
நவ 29, 2024 14:59

பெண்கள் கேட்காத உரிமையை இவர்கள் தானாக குடுக்கிறாரகள் ... இப்போ எல்லாம் சானிடரி pad கிடைக்கிறதே ... ஒட்டு வேண்டும் அவ்ளோதான் ...


kulandai kannan
நவ 29, 2024 13:49

விடுமுறை நாட்களில் யாரும் சொல்லப் போவதில்லை. வேலை நாட்களில் மட்டும்தான் சொல்வார்கள்.


Ramesh Sargam
நவ 29, 2024 13:00

அந்த இரண்டு நாள் விடுமுறை நாட்களில் அவர்கள் என்ன சமத்தாக வீட்டிலேயே இருக்கப்போகிறார்களா? இல்லை, நண்பிகளிடம் அல்லது பாய் நண்பர்களிடம் சேர்ந்து கொண்டு வெளியில் சுற்றுவார்கள்.


வைகுண்டேஸ்வரன்
நவ 29, 2024 12:14

கேரள அரசின் மாணவர் நல அறிவிப்பை எதிர்மறையாக விமர்சிக்கிரவர்கள், இதோ Ugc யின் இந்த அறிவிப்பு பற்றி சொல்லுங்க : பட்டப்படிப்பை நினைத்த நேரத்தில் முடிச்சுக்கோங்க மாணவர்களுக்கு நல்ல செய்தி சொல்கிறார் யு.ஜி.சி., தலைவர். இப்பவே 4 வருஷ இன்ஜினியரிங் படிப்பை 6, 7 வருஷமா, 10, 20 அரியர்ஸ் வெச்சுக்கிட்டு படிக்கறானுங்க... யு ஜி சி அவர்களை இன்னும் உருப்படாம போக வைக்கிறது


Pats, Kongunadu, Bharat, Hindustan
நவ 29, 2024 14:24

அது அப்படி இல்லை சாமி. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவர்கள் விரைவில் படித்து முடிக்கவும் அல்லது இரண்டு ஆண்டு முடித்த பின் விரும்பிய துறையில் வேலை செய்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்று பின் விரும்பினால் இரண்டு ஆண்டுகளை படித்துக்கொள்ளலாம். அனைத்து மாணவர்களும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கட்டாயம் நான்கு வருடங்கள் கல்லூரிக்கு வரவேண்டும், பணம் கட்டவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.


Ravichandran,Thirumayam
நவ 29, 2024 15:46

ஐயா வைகுண்டரே எல்லாம் தெரிந்தது போல் காட்டிக் கொள்ள உமக்கு தெரியாத விஷயங்களில் மூக்கை நுழைத்தால் இப்படித்தான் மூக்கறு பட வேண்டும். இனிமேலாவது கவனமுடன் கருத்துக்களை பதிவிடவும்...


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 29, 2024 16:32

வைகுண்டேஸ்வரன், ஹிந்து பெயரில் எழுதி பல்பு வாங்கினா அசிங்கம் ஹிந்துபெயருக்குத்தான்ன்னு நினைச்சுட்டீரா ??


Raja
நவ 29, 2024 12:00

மிகுவும் பின்னோக்கி போகும் அறிவிப்பு . ஏன் 1 இது அவர்களின் பெர்சனல் உடல் சார்ந்த விழயம் . இது இப்போது பொது விழாமயக்கிவிட்டது 2 கேரளாவில் சமீபத்தில் ஐயப்பன் கோவிலுக்கு செல்வதற்கு இது தடை இல்லை என்று போராட்டம் நடந்தது . கம்யூனிஸ்ட் அரசும் அதற்கு சைலன்ட் ஆக இருந்தது . நாடு எங்கெசெல்கிறது . மக்கள் முடிவு செய்யட்டும் . நன்றி


வைகுண்டேஸ்வரன்
நவ 29, 2024 11:59

இந்த செய்தியில் ஏராளமான நன்மைகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் வழக்கம் போல பாஜக கொத்தடிமைகள் இங்கே வந்து, "கம்யூனிஸ்ட் அரசா எதிர்மறையாக எழுதுவோம் " என்று கண்மூடித்தனமாக எழுதுகிறார்கள், பாவம்.


C.SRIRAM
நவ 29, 2024 16:02

கருத்து என்கிற பெயரில் கம்மி கொத்தடிமை உளற கூடாது . இதில் ஒரு நன்மையையும் இல்லை . சம்பந்தப்பட்டவர்கள் சங்கடமாக உணர்வார்கள் .


C.SRIRAM
நவ 29, 2024 11:08

கேணைத் திட்டம் . இது தனிநபர் சம்பந்தபட்டதை எல்லார்க்கும் தெரியும்படி செய்வது அநாகரிகம் .


Edward,Aruppukkottai 626125
நவ 29, 2024 12:56

ஏய் உனக்கு என்னைக்குப்பா Date? வர்ற வியாழக்கிழமை. ஹையா ஒரே ஜாலிதான் தொடர்ந்து நாலு நாள் லீவு. ஆமா ஒனக்கு? எனக்கு சனியன் இப்பதான் முடிஞ்சிச்சு அப்படியே வந்தாலும் கரெக்டா சனிக்கிழமையா பாத்துதான் வரும். ஹூம் எதுக்கும் அதிஷ்டம் இருக்கணும் நீ கொடுத்து வச்சவ...


duruvasar
நவ 29, 2024 11:02

இந்த தளர்வு, தேர்வு நேரம், நேர்காணல், பட்டமளிப்பு காலங்களுக்கும் விரிவுப்படுத்தலாமே. செய்வீர்களா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை