உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிக்னல் கோளாறால் மெட்ரோ சேவை பாதிப்பு 

சிக்னல் கோளாறால் மெட்ரோ சேவை பாதிப்பு 

பெங்களூரு: ஒயிட்பீல்டு ரயில் நிலையத்தில் சிக்னலில் ஏற்பட்ட கோளாறால், மெட்ரோ ரயில் சேவை ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, ஒயிட்பீல்டு - செல்லகட்டா; நாகசந்திரா - சில்க் இன்ஸ்டிடியூட் வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினமும் சராசரியாக 6 லட்சம் பேர், மெட்ரோ ரயிலில் பயணம் செய்கின்றனர்.இந்நிலையில் நேற்று காலை 8:25 மணிக்கு ஒயிட்பீல்டு மெட்ரோ ரயில் நிலையத்தின் சிக்னலில் திடீரென கோளாறு ஏற்பட்டது.மெட்ரோ ரயிலின் நிர்வாக இன்ஜினியர்கள், சிக்னலை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் செல்லகட்டாவில் இருந்து வந்த ரயில்கள் நல்லுரஹள்ளி ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்பட்டன.சிக்னலில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட்ட பின், ஒரு மணி நேரத்திற்கு பின், வழக்கம்போல ஒயிட்பீல்டு வரை ரயில் இயங்கியது. பயணியருக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு, மெட்ரோ ரயில் நிர்வாகம் வருத்தம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை