உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.,க்கள் குழு சந்திப்பு

மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.,க்கள் குழு சந்திப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புயல், வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய ரூ.39,000 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக எம்.பி. டி.ஆர். பாலு தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்தனர்.தமிழகத்தில் கடந்த மாதம் 3, 4ம் தேதிகளில், 'மிக்ஜாம்' புயலால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. டிச., 17, 18ல் பெய்த வரலாறு காணாத மழையால், துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில், கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இரண்டு மிகப்பெரிய இயற்கை பேரிடர்களுக்கும், மத்திய அரசிடமிருந்து தமிழக அரசு நிவாரணத் தொகையாக, 37,907.19 கோடி ரூபாய் கோரியுள்ளது. இந்நிலையில், புயல், வெள்ள பாதிப்புக்கு தமிழக அரசு கோரிய ரூ.39,000 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க கோரி, திமுக எம்.பி. டி.ஆர். பாலு தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்தனர். அப்போது அவர்கள்,''தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். சுமார் ரூ.37,000 கோடி நிவாரண நிதியாக வழங்க வேண்டும்'' என வலியுறுத்தி உள்ளனர்.பின்னர் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நிதித் துறை, வேளாண் துறை மற்றும் உள்துறை ஆகிய மூன்று துறைகளுடன் இணைந்து தமிழக வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசித்து, வரும் 27ம் தேதிக்குள் வெள்ள நிவாரண நிதி வழங்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Karthikeyan K Y
ஜன 14, 2024 00:14

திமுக எம்பீக்கள் அவர்களின் சொத்து மதிப்பை திமுக தலைவர் கோர்ட்டில் சமர்பிப்பாரா , டீ ஆர் பாலு, ராசா, ஜெகத்ரக்ஷகன் கனிமொழி கதிர் ஆனந்த், கார்த்தி சிதம்பரம் சிதம்பரம் தோல் திருமாவளவன் ஜோதிமணி மற்றும் கம்யூனிஸ்ட் காங்கிரஸ் உறுப்பினர்களும் மக்களிடம் அவரவர் தொகுதியில் போஸ்டர் அடித்து சொத்து மதிப்பை ஓட்ட சொல்லுங்கள் மக்களே


Saai Sundharamurthy AVK
ஜன 13, 2024 22:27

தேர்தல் நாடகம். இந்த எம்.பி குழுவினருக்கு வேறு வேலையே கிடையாது. கடந்த ஐந்து வருடங்களாக தலையை வெளியில் காட்டாத எம்பிக்கள் எல்லாம் இப்போது தலை காட்டுவது ஏன் ????


HoneyBee
ஜன 13, 2024 19:20

Surrender. . Surrender.. surrender.


திகழ்ஓவியன்
ஜன 13, 2024 19:31

விடா கொண்டான் உடன் போட்டோ SHOOT , ஒரு பிரயோஜனமில்லை


ராஜா
ஜன 14, 2024 05:41

ஆமா ஜீப்பில் ஏற முடியாமல் ஏறி, முழங்கால் பூட்ஸ் போட்டு கணுக்கால் அளவு தண்ணீரில் நின்று வீட்டில் இருந்து வந்த சூடு தண்ணிய கடையில் குடுத்து டி குடிக்கிற மாதிரி நடிப்பு போட்டோ சூட் குடுத்தா தான் அடிமைகள் நம்புகிறமாதிரி பிரயோசனமாக இருக்கும்.


Seshan Thirumaliruncholai
ஜன 13, 2024 19:01

நாட்டின் நிதிநிலையை அரசியல் செய்யாமல் யதார்த்த நிலையில் நிதி கேட்கவேண்டும். பொருளாதார பாதிப்பு மக்களுக்கு அதிகம். ரூபாய் 6000 கொடுக்கப்பட்டது போதாது. மக்கள் கொடுத்ததை ஏற்றுக்கொண்டார்கள். மக்களுக்கு மேலும் நிவாரணம் கொடுப்பது அவசியம். இதனை மத்திய அரசுபாதிக்கப்பட்டவர் வங்கி கணக்கில் நேரடியாய் வழங்கலாம். இடை தரகர் ஊழல் இருக்காது. இந்த வழிமுறையில் பெற்று தருவது தி மு க மீது நாட்டம் அதிகமாகும்


Bala
ஜன 13, 2024 18:28

திராவிட மாதிரிகள் திராவிட சைக்கோவுடன் சென்று சந்தித்தால் விளங்கு?


Rpalnivelu
ஜன 13, 2024 17:39

//பின்னர் திமுக எம்.பி., டி.ஆர்.பாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:...// சாராய பாக்டரி முதலாளியே லட்சக்கணக்கான கோடி சொத்துக்களை வைத்துள்ள நீயே அதைக் கொடுக்க முடியாதா?


Palanisamy Sekar
ஜன 13, 2024 16:50

இந்த பணம் வருகின்ற தேர்தலுக்கு மக்களுக்கு கொடுக்கபோகும் ஓட்டுக்கு நோட்டு என்கிற வகையில் உதவிடும் என்று ஆளும் தரப்பு விடாமல் துரத்துகின்றது. இது வெள்ளப்பாதிப்புக்கு பதிலாக ஊழலை மறைக்க மக்களுக்கு இந்த பணத்தை கொடுத்து ஒட்டு வாங்கிடவே பயன்படுத்தப்படுகின்றது. அதனால மத்திய அரசாங்கமே நேரில் மக்களுக்கு வழங்கலாம், இல்ல்லையேல் திராவிடிய திருடர்கள் தங்களுக்கு ஒதுக்கிக்கொள்வார்கள் என்பதுதான் நிஜம்


Svs Yaadum oore
ஜன 13, 2024 16:46

கொள்ளையடித்த காசை திருப்பி கொடுத்தாலே போதுமே ...இப்ப எதுக்கு ரூ.39,000 கோடி கேட்டு ....


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை