உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6,000 பேர் பணிநீக்கம்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 6,000 பேர் பணிநீக்கம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மைக்ரோசாப்ட் நிறுவனம் 6,000க்கும் அதிகமான பணியாளர்களை உடனடி பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.செயற்கை நுண்ணறிவில் கூடுதல் முதலீடு செய்ய வேண்டியுள்ளதால், பணிநீக்கம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. உலகெங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு 2.28 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் கிட்டத்தட்ட 3 சதவீதம் பேரை நிறுவனம் தற்போது பணி நீக்கியுள்ளது.மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அமெரிக்காவில் மட்டும் 1.26 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 20,000 பேர் பணியாற்றுகின்றனர். எனினும், இந்தியாவில் உள்ள பணியாளர்களும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

வல்லவன்
மே 15, 2025 16:44

மீனவ நண்பன் அவர்களே நம்ம ஆளுங்க கில்லாடிங்க. கொல்டிக மனவாடு கோஷ்டிக fake payroll run பண்ணி USCIS ஐயே ஏமாத்துறானுங்க. வேல போனாலும் வேலைல இருக்கற மாறி காமிச்சு தப்புச்சுக்கறாங்க. கொல்ட்டிங்க நடத்தும் IT company இதுக்கு மாசமாசம் ஒரு amount வாங்கிட்டு இந்த பிராடு வேலைய பண்ணிதறானுங்க


அமெரிக்குமார்
மே 15, 2025 10:07

அனைவரும் வருக. வேலைகள் ரெண்டு கோடி அளவிற்கு குமிஞ்சி கிடக்கு.


மீனவ நண்பன்
மே 15, 2025 08:59

அமெரிக்காவில் தலைமையகம் ரெட்மாண்டில் நேற்று பணி நீக்கம் நடந்தது ..ரகசியமாக யாருக்கும் எந்த தகவலும் கசிய விட வேண்டாம் என்று டீம் லீடர்களுக்கு சுற்றறிக்கை ..சில டீம் லீடர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் .H1B விசாவில் இருப்பவர்கள் ரெண்டு மாதங்களுக்குள் வேறு வேலை கிடைக்கா விட்டால் மூட்டை முடிச்சுகளோடு இந்தியா திரும்ப வேண்டும் ..இஸ்ரேலில் மட்டுமே வேலை கிடைக்கும்


தர்மராஜ் தங்கரத்தினம்
மே 15, 2025 08:38

பொதுவாக கையில் ப்ராஜெக்ட் ஒன்றுமில்லை என்றால் வீட்டுக்கு அனுப்பவே செய்வார்கள்..


Arinyar Annamalai
மே 15, 2025 07:12

ஏ ஐ யினால் பாதிப்புகள் கண்டிப்பாக இருக்கும். ஏ ஐ எல்லா துறைகளிலும் தலையை நுழைத்து கூடாரத்தை காலி செய்யும்.


RAMAKRISHNAN NATESAN
மே 15, 2025 09:57

ஏ ஐ யால் மானிடர்களுக்கு கிடைக்கும் அனைத்து வேலை வாய்ப்புக்களை பறித்துவிட முடியாது ....


J.Isaac
மே 15, 2025 17:47

டிரைவர், டெலிவரி பாய் வேலை காலியாக உள்ளது.கிட்டத்தட்ட 22 லட்சம் டிரைவர்கள் வேலை காலி உள்ளதாக தகவல்


மீனவ நண்பன்
மே 15, 2025 22:37

டிரைவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை வர இருக்கிறது நிறைய பஞ்சாபிகள் வேலை இழக்கும் அபாயம்


புதிய வீடியோ