உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மினிமம் பேலன்ஸ் தீர்மானிப்பது வங்கிகள் தான்; நாங்கள் கட்டுப்படுத்தவில்லை: ரிசர்வ் வங்கி

மினிமம் பேலன்ஸ் தீர்மானிப்பது வங்கிகள் தான்; நாங்கள் கட்டுப்படுத்தவில்லை: ரிசர்வ் வங்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள். நாங்கள் கட்டுப்படுத்தவில்லை'' என ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தெளிவுப்படுத்தி உள்ளார்.குஜராத் மாநிலத்தில் உள்ள மெஹ்சானா மாவட்டத்தில் நிருபர்களிடம் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியதாவது: சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) நிர்ணயிக்க வங்கிகளுக்கு சுதந்திரம் உள்ளது. மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள். நாங்கள் கட்டுப்படுத்தவில்லை.அது ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை வரம்பிற்குள் வராது. குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) நிர்ணயிக்க விரும்பும் தொகையை தீர்மானிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. சில வங்கிகள் ரூ.10 ஆயிரமாகவும், சில வங்கிகள் ரூ.2 ஆயிரமாகவும் வைத்திருக்கின்றன.மேலும் வங்கிகள் சில வாடிக்கையாளர்களுக்கு விலக்கு அளித்துள்ளன. இது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். சேமிப்பு கணக்குகளுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை (மினிமம் பேலன்ஸ்) நிர்ணயிக்கும் பொறுப்பு வங்கிகளிடம் ரிசர்வ் வங்கி ஒப்படைத்துள்ளது என தனியார் வங்கி ஒன்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

sankaranarayanan
ஆக 12, 2025 18:45

தேசிய உடமை ஆக்கப்பட்ட எல்லா வங்கிகளிலும் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை என்றே கூறிவிட்டார்கள் இனி மக்கள் அதைப்பற்றி கவலை பட தேவை இல்லை


அப்பாவி
ஆக 12, 2025 16:23

இப்படைப் பட்ட ரிசர்வ் பேங்குதான் ஆள்பவர்களுக்கு நல்லது. ஏண்டா பாவி இப்பிடி செய்யறாங்கந்னு ஒருத்தரும் யாரையும் கேள்வி கேக்கக் முடியாது. கேக்கக் கூடாது.


Raj
ஆக 12, 2025 15:15

ஏன் வங்கிகள் எல்லாம் ரிசர்வ பேங்க் கட்டுப்பட்டில் இருக்கும் போது மினிமம் பேலன்ஸ் மட்டும் அதென்ன வங்கி கண்ட்ரோல். அப்புறம் எதற்கு ரிசர்வு பேங்க்.


V Venkatachalam
ஆக 12, 2025 14:44

கனரா வங்கி மிகவும் துணிச்சலாக மினிமம் பேலன்ஸ் தேவையில்லை என்று சமீபத்தில் அறிவித்தது. மற்ற வங்கிகளும் இதை அமல் படுத்த வேண்டும். வருங்காலத்தில் இது எல்லா வங்கிகளும் அமல் படுத்தும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 12, 2025 16:33

இந்தியன் வங்கியிலும் ஜூலை முதல் தேதி முதல் மினிமம் பேலன்ஸ் கட்டுப்பாடு நீக்கப்பட்டுவிட்டது


A.Gomathinayagam
ஆக 12, 2025 14:13

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்றவை தான் தனியார் வங்கிகள் ,அவர்கள் சேவை செய்வதற்காக வங்கி கிளைகள் திறக்கவில்லை .லாபம் சம்பாதிக்கவே ,மக்கள் சேவைகளை குறைந்த செலவில் செய்யும் அரசு வங்கிகள் ,தபால் நிலைய சேமிப்பு களுக்கு செல்லலாம்


தத்வமசி
ஆக 12, 2025 13:58

ரிசர்வ் வங்கியின் கீழ் எல்லா வங்கிகளும் இயங்குகின்றன. அவர்களுக்கு நேரடியாக கட்டளை இட வேண்டியது தானே ? சும்மா ஒதுங்கி இருந்து வேடிக்கை பார்த்தால் எப்படி ?


sankar
ஆக 12, 2025 13:48

ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தவேண்டும்


சேகர்
ஆக 12, 2025 13:18

இது வளர்ச்சியின் குறியீடு .. ICICI மினிமம் பாலன்ஸ் Rs 50,000 என உறுதி இருப்பது வரவேற்க தக்கதே...இந்த பணம் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும்


naranam
ஆக 12, 2025 13:10

அப்படியெல்லாம் கூறித் தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் வெளிப்படுகிறது இவருடைய பேச்சில். அது தவறான நோக்கம். கடன் வாங்கியவர்களிடம் கடனை வசூலிக்கவும்.


ஆரூர் ரங்
ஆக 12, 2025 12:40

முந்திய UPA ஆட்சிக் காலத்திலும் தனியார் உயர்தர வங்கிகள் 50000, லட்சம் ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்பு நிபந்தனையுடன்தான் செயல்பட்டன. அவை 5 ஸ்டார் ஓட்டல் போன்றவை. ஏழைகளுக்கு மினிமம் பேலன்ஸ் இல்லாத ஜன்தன் கணக்கு எல்லா அரசு வங்கிகளிலும் உண்டு. இப்போது கிளைகளில் நேரடி பரிவர்த்தனை குறைந்து விட்டாலும் வாடகை, மின்கட்டணம், நேரடி செக்யூரிட்டி, சாப்ட்வேர் செக்யூரிட்டி போன்ற செலவினங்கள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தனியார் வங்கிகள் வருமானமே இல்லாத சேவைகளை அளிக்க முடியாது. தனியார் பேருந்து போல வங்கிகளின் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்ய சட்டத்திலும் இடமில்லை. இயலாதவர்கள் ஜீரோ பேலன்ஸ் கணக்கு வசதிகள் உள்ள வங்கிகளுக்கு மாறலாமே.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை