உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்: உயர்த்தியது மத்திய அரசு

தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்: உயர்த்தியது மத்திய அரசு

புதுடில்லி: பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது; இது, அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.மத்திய அரசு, வி.டி. ஏ., எனப்படும் மாறுபடும் அகவிலைப் படியை, ஏப்., 1 மற்றும் அக்., 1ம் தேதிகளில் மாற்றி அமைத்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் திருத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை வெளியிட்டுள்ள செய்தி:

அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், வி.டி.ஏ., திருத்தப்பட்டுள்ளது. கடைசியாக, கடந்த ஏப்., மாதம் திருத்தப்பட்டது. விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் வைத்து தற்போது திருத்தப்பட்டுள்ளது. இது, அக்., 1 முதல் அமலுக்கு வருகிறது.கட்டுமானம், சுமை ஏற்றுதல் மற்றும் இறக்குதல், சுரங்கம், வேளாண் உட்பட பல்வேறு துறைகளில் உள்ள ஊழியர்கள், அவர்களுடைய திறன் அடிப்படையிலும் மற்றும் பணியாற்றும் இடத்தின் அடிப்படையிலும் பிரிக்கப்படுகின்றனர்.கட்டுமானம், துப்புரவு பணியாளர்கள், சுமைகள் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் போன்ற திறன் சாராத பிரிவினருக்கு, குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம், 783 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதன்படி, மாதத்துக்கு, 20,358 ரூபாய் வருவாய் கிடைக்கும். குறைந்தபட்ச திறன் துறைகளில் பணியாற்றுவோருக்கு, ஒரு நாள் ஊதியம், 868 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதாவது மாதத்துக்கு, 22,568 ரூபாய் கிடைக்கும்.திறன் சார்ந்த துறைகள், அலுவல் பணியாற்றுவோருக்கான ஒருநாள் ஊதியம், 954 ரூபாயாக உயர்கிறது. மாதத்துக்கு, 24,804 ரூபாய் கிடைக்கும். உயர் திறன் சார்ந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு, ஒருநாள் ஊதியம், 1,035 ரூபாயாகும். மாதத்துக்கு, 26,91-0 ரூபாய் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
செப் 27, 2024 10:06

ஏற்கனவே விவசாயம் சார்ந்த துறைகள் ஒருநாள் கூலியாக ஆண்களுக்கு 800 பெண்களுக்கு 650 என்றுள்ளது


Kasimani Baskaran
செப் 27, 2024 05:40

உலகு போற்றும் வகையில் பொறியாளர்களை உருவாக்கிய தமிழகத்தில் சாதா தொழிலாளிக்கு கிடைக்கும் அளவுக்கு கூட சம்பளம் கிடைக்காது என்பது வேதனையான உண்மை. செபாவின் குழுவில் சேர்ந்தால் கண்டிப்பாக குறைந்தபட்ச ஊதியம் கிடைக்கும் என்பது ஆறுதல். போற்றுவோம் போற்றுவோம் மதுவை போற்றுவோம். அப்படியே மதுவை உற்பத்தி செய்தவனையும், குடிப்பவனையும் போற்றுவோம்... சான்றோர்களை ஆலோசித்து திருக்குறளில் மதுவின் சிறப்பு பற்றி பத்து குறள்களை சேர்த்து காலத்துக்கு ஒவ்வாத பழைய கள்ளுண்ணாமை அதிகாரத்தை நீக்கலாம் என்ற ஒரு திட்டம் கூட இருப்பதாக சொல்கிறார்கள்.


thamizhagam
செப் 27, 2024 08:04

100% true


Ms Mahadevan Mahadevan
செப் 27, 2024 04:39

சட்டம் போட்டால் அது நடைமுறை படுத்தப் படுகிறதா என்று பார்க்கப் வேண்டும். இங்கு தொழிலாளர்களுக்கு மேற்படி ஊதியம் கிடைக்கவில்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை