மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
7 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
7 hour(s) ago
சாம்ராஜ்நகர்: மகனின் அரசியல் எதிர்காலம் கருதி, சாம்ராஜ்நகரில் போட்டியிட வாய்ப்பு தரும்படி, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா அடம் பிடிக்கிறார்.காங்கிரஸ் கோட்டையான சாம்ராஜ்நகர் லோக்சபா தொகுதியை, முதன் முறையாக 2019ல் பா.ஜ., கைப்பற்றியது. இதற்கு, கட்சி பலத்துடன் சேர்த்து, எம்.பி., சீனிவாச பிரசாத்தின் செல்வாக்கும் அடங்கும். தங்கள் வசம் இருந்த தொகுதி, பா.ஜ.,விடம் சென்றுவிட்டதே என்று காங்கிரசார் புலம்பிக் கொண்டிருந்தனர்.எனவே 2024 தேர்தலில், தொகுதியை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வந்து விட வேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர்கள் மும்முரமாக உள்ளனர்.சாம்ராஜ்நகரில் போட்டியிட தகுதியான வேட்பாளர்கள் குறித்து ஆராய்ந்தபோது, தற்போதைய சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா தான் சரியான நபர் என்று காங்கிரஸ் மேலிடம் தீர்மானம் செய்துள்ளது.எனவே, போட்டியிடுவதற்கு தயாராகும்படி, அவரை மேலிட தலைவர்கள் அறிவுறுத்தினர். இதை ஏற்க, மஹாதேவப்பா மறுத்துவிட்டார். தனக்கு லோக்சபா சீட் வேண்டாம், தன் மகன் சுனில் போஸ் போட்டியிட வாய்ப்பு தரும்படி வேண்டியுள்ளார்.ஆனால், கட்சி மேலிடமோ, அவர் தான் போட்டியிட வேண்டும் என்று உறுதியாக கூறிவிட்டது. தான் போட்டியிட்டால், தன் மகனின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்று அங்கலாய்க்கிறார்.
7 hour(s) ago | 1
7 hour(s) ago