உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழலை மறைப்பதற்காக மொழியின் பெயரால் நஞ்சை பரப்புவதா? ராஜ்யசபாவில் தி.மு.க.,வை நோக்கி அமைச்சர் அமித் ஷா அதிரடி!

ஊழலை மறைப்பதற்காக மொழியின் பெயரால் நஞ்சை பரப்புவதா? ராஜ்யசபாவில் தி.மு.க.,வை நோக்கி அமைச்சர் அமித் ஷா அதிரடி!

''மொழியின் பெயரால் அரசியல் செய்ய தி.மு.க.,வினர் விரும்புகின்றனர். மொழியை வைத்து மக்களிடம் நஞ்சை பரப்புகின்றனர். தங்களது ஊழல்களை மறைப்பதற்காகவே, மொழி விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்; அவர்களை அம்பலப்படுத்துவோம்.''வரும் டிசம்பர் மாதம் முதல், பொதுமக்கள், முதல்வர்கள், எம்.பி.,க்கள் என அனைத்து தரப்புக்குமே என் தகவல் தொடர்புகளை, அவரவர் தாய்மொழிகளிலேயே எழுதப் போகிறேன்,'' என, ராஜ்யசபாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். ராஜ்யசபாவில் நேற்று உள்துறை அமைச்சகம் மீதான விவாதத்தின்போது, ம.தி.மு.க., - எம்.பி., வைகோ பேசும்போது, ''பேரிடர் நிவாரண நிதியை விடுவிக்கக் கூடிய பொறுப்பில் இருக்கும் மத்திய உள்துறை அமைச்சர், தமிழகத்தை பழி வாங்குகிறார்.''காரணம், உங்களது ஹிந்துத்துவா கொள்கைக்கு நாங்கள் எதிராக இருக்கிறோம். ஆர்.எஸ்.எஸ்.,சின் செயல்திட்டங்களுக்கு எதிராக தமிழகம் இருப்பதால் இவ்வாறு செய்கிறீர்கள். ''ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை தமிழகம் எதிர்ப்பதும், உங்கள் நடவடிக்கையின் பின்னணிக்கு காரணமாக உள்ளது. ஹிந்திக்கு இலக்கணம் கிடையாது. இலக்கியங்களே இல்லாத மொழியும் கூட. அது, மிகவும் கடினமான மொழி,'' என்றார்.

அலுவல் மொழி

அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை பேசும்போது, ''இந்தியாவின் அலுவல் மொழியாக தமிழை ஆக்க வேண்டும். இது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க.,வின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது,'' என்றார். தி.மு.க., - எம்.பி.,சண்முகம், ''ஹிந்தியை மறைமுகமாக திணிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. 2023ல் கொண்டு வரப்பட்ட குற்றவியல் நடைமுறை சட்டங்களுக்கான பெயர்களைக்கூட சமஸ்கிருதத்தில் மத்திய அரசு சூட்டியது.''தமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய மறுக்கிறது,'' என்றார்.

இந்த விவாதத்திற்கு பதிலளித்து அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

மொழி விவகாரத்தை வைத்து தி.மு.க.,வினர் அரசியல் செய்யப் பார்க்கின்றனர். அவர்கள் செய்துள்ள ஊழலை மறைப்பதற்காக மொழி விவகாரத்தை கையில் எடுத்து பிரச்னை செய்ய முயற்சிக்கின்றனர். ஒவ்வொரு மொழியும் இந்த நாட்டினுடைய ஒவ்வொரு ஆபரணங்களை போன்றவை.தி.மு.க.,வின் நிஜமான நோக்கம் என்ன? தென் மாநிலங்களைச் சேர்ந்த எல்லா மொழிகளுக்கும் நாங்கள் எதிரிகள் என்று சொல்லப் பார்க்கிறீர்களா; அது எப்படி சாத்தியம்? நான் குஜராத்தில் இருந்து வருகிறேன்.நிர்மலா சீதாராமன் தமிழகத்திலிருந்து வந்துள்ளார். எனவே, மொழியை அடிப்படையாக வைத்து, யாரெல்லாம் அரசியல் செய்ய திட்டமிட்டுள்ளனரோ, அவர்கள் அனைவருக்குமே அரசியல் உள்நோக்கம் இருக்கிறது.பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வுகளை, தாய் மொழியான தமிழில் மொழி மாற்றம் செய்வதற்கு உரிய தைரியமோ, துணிச்சலோ உங்கள் அரசுக்கு இருக்கிறதா என்றால் இல்லை.ஆனாலும், மொழியின் பெயரால் மக்கள் மத்தியில் நஞ்சை பரப்புகிறீர்கள். பல ஆயிரம் கி.மீ., துாரத்திற்கு அப்பால் இருந்து வரும் மொழியை ஆதரிப்பீர்கள்; ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால், இந்தியாவின் மொழிகளில் ஒன்றை ஏற்க மாட்டீர்களா? வரும் டிசம்பர் மாதம் முதல், பொதுமக்கள், முதல்வர்கள், எம்.பி.,க்கள் என அனைத்து தரப்புக்குமே என் தகவல் தொடர்புகள் அனைத்தையும், அவரவர் தாய்மொழிகளிலேயே இருக்கும்படி எழுதி தொடர்பு கொள்ளப் போகிறேன்.மொழியை வைத்து, தங்களது ஊழல்களை மறைக்க பார்ப்பவர்களுக்கு இதுதான் என் உறுதியான பதிலடி.மொழியின் பெயரால் இந்த நாட்டை நீங்கள் பிளவுபடுத்த நினைக்கக் கூடாது. உங்களுடைய தவறான நடவடிக்கைகள் மற்றும் உங்களுடைய ஊழல்கள் ஆகியவற்றை மறைக்கப் பார்க்கிறீர்கள். அதற்கு ஒரு வசதியான ஆயுதமாக, மொழியை கையிலெடுத்து பிரச்னை செய்கிறீர்கள்.

ஆதாயம் தேடாதீங்க

நீங்கள் வளர்ச்சியை பற்றி பேச வேண்டும். அதை விடுத்து, இதுபோன்ற மொழி அடிப்படையிலான விஷயங்களை மக்கள் மத்தியில் பரப்பி ஆதாயம் தேடக்கூடாது.ஹிந்தி, பிற மொழிகளுக்கு போட்டியான மொழி அல்ல. இந்தியாவின் பிற அனைத்து மொழிகளுக்குமான நட்பு மொழிதான் ஹிந்தி.மற்ற மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு பதிலாக, அந்த மொழிகளுக்கு ஆதரவாகவே ஹிந்தி இருந்து வருகிறது.மோடி தலைமையிலான மத்திய அரசு, அலுவல் மொழிகளுக்கான துறையின் கீழ், இந்திய மொழிகளுக்கான பிரிவை அமைத்து, தமிழ், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, அஸாமி, பெங்காலி போன்ற மொழிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் பா.ஜ., ஆட்சிக்கு வரும்போது பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளுக்கான அனைத்து பாடங்களையும் தமிழிலேயே கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.உங்களை நிச்சயம் அம்பலப்படுத்துவோம். ஒவ்வொரு கிராமத்திற்கும் மூலை முடுக்கெல்லாம் சென்று உங்களுடைய தவறான நடவடிக்கைகளை மக்களிடம் பிரசாரம் செய்து, நீங்கள் யார் என்பதையும், உங்களுடைய உண்மையான முகம் எது என்பதையும் நிச்சயம் வெளிச்சம் போட்டு காட்டுவோம். இவ்வாறு அவர் பேசினார். - நமது டில்லி நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

globetech engineers airport project
மார் 22, 2025 10:23

அப்படியே தேர்தல் பத்திரம் குறித்து கொஞ்சம் பேசணும்


Dharmavaan
மார் 22, 2025 18:11

அப்படியே சீனா ராஜிவ் டிரஸ்ட் ட்டுக்கு கொடுத்த லஞ்சம் பிற கொள்ளை பற்றயும் பேசணும்


Mahesh Mu
மார் 22, 2025 10:21

கவனமாக இருங்கள்....உள்துறை அமைச்சகத்திலிருந்து அனைவரும்....... தினமும் 24 நேரமும் ஒவ்வொரு அழைப்பிலும் அலாரம் வந்துகொண்டேயிருக்கிறது... பிஜேபி தவிர அனைத்து கட்சிகளுக்கும்... மக்களுக்கும்...... கவனமாக இருங்கள்......பதவி அதிகாரத்தை பிடிக்க என்னவேண்டுமானாலும் செய்வார்கள்.....


chennai sivakumar
மார் 22, 2025 08:31

நன்கு படித்த வட இந்திய அதிகாரிகளும் தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசுவதில்லை. அலுவலகங்களில் நான்கு வரிகள் ஆங்கிலத்தில் பேசி பிறகு ஹிந்திக்கு மாறி விடுகின்றனர். இது நிறைய முறை நான் அனுபவ பட்டு இருக்கிறேன். மேலும் வட இந்திய பெரு நகங்களில் நீங்கள் ஆங்கிலத்தில் கேட்டால் முக்கால்வாசி பேர் பதில் சொல்லுவது இல்லை. அவர்கள் இந்தியில் மட்டுமே பதில் கூறுவார்கள். இதுவும் சொந்த அனுபவம். மூன்றாவது மொழி இந்திய மொழி என்று இந்தியை எப்படி கூறலாம். அது மொழியே அல்ல. கதம்ப சாதம் கதம்ப கூட்டு என்று இல்லங்களில் மிச்சம் மீதி உள்ள காய்கறிகளை போட்டு சமைத்து விடுவார்கள். அது போல இந்தி உருது லத்தின் பாரசீகம் போன்ற மொழிகளின் கலப்பு. சரி ஆங்கிலம் அந்நிய மொழி. அப்போ உருது இந்தி எல்லாம்.நமது நாட்டின் மொழியா? தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் மட்டுமே நமது நாட்டில் பிறந்து புழங்கி வந்தது. தற்போது சம்ஸ்க்ருதம் புழக்கத்தில் குறைவு. அவ்வாறு பார்த்தால் தமிழ் மட்டுமே இந்த நாட்டின் மொழியாக இருக்க வேண்டும். வேறு எந்த மொழிக்கும் இடம் இல்லை. ஆங்கில மொழியை ஏற்று கொள்ள முடியாதவர்கள் எதற்கு ஆங்கிலேயன் கண்டு பிடிப்புகள் பயன் படுத்த வேண்டும்? பேசாமல் அந்த காலத்தில் காசிக்கு மாட்டு வண்டியில் மட்டுமே போவார்களாம். அது போல பயணம் செய்யுங்கள். இன்று உள்ள 3 அல்லது 4 வயது குழந்தைகள் கூட கை பேசியை உபயோகிக்கும் அளவுக்கு நாடு முன்னேற்றம் அடைந்து உள்ளது. மேலும் இந்தியாவில் மட்டுமே கை பேசி அதிகம் உபயோகிப்பவர்கள் உள்ளனர் உங்களது விதண்டாவாதம் பயனற்றது. மொத்தத்தில் நீங்கள் இந்தி வெறியர்கள் என்பது கண்கூடான உண்மை. நாங்கள் தமிழ் வெறியர்கள். உங்களுக்கு வந்தால் இரத்தம் எங்களுக்கு என்றால் தக்காளி சட்டினியா?


Dharmavaan
மார் 22, 2025 18:13

நீ India இந்த மற்ற மாநிலத்துக்கு போனால் ஹிந்தி தேவை பெரும்பான்மை மொழி ஜனநாயகம் பெருபான்மை பக்கம்


sankaranarayanan
மார் 22, 2025 08:29

வைகோ நாவை அடக்கி பேச வேண்டும் - ஹிந்திக்கு இலக்கணம் கிடையாது. இலக்கியங்களே இல்லாத மொழியும் கூட. அது, மிகவும் கடினமான மொழி, என்றார்.அது ஒட்டுமொத்த இந்தியாவையே பாதிக்கும் இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளுக்கும் சமமான அந்தஸ்து உண்டு எல்லா மொழிகளிலும் இலக்கணம் உண்டு ஒரு மொழியில் இலக்கணம் இல்லை என்று கூற இவர் யார் ஹிந்தியை முழுக்க படித்தவரா அரைகுறையாக மற்றவர் சொல் கேட்டு ஆடும் வித்தைக்காரர் அவையில் காரசாரமாக பேசுவதானல் ஒரு மொழிக்கு இலக்கணமே இல்லை என்று கூறவே கூடாது


S.L.Narasimman
மார் 22, 2025 08:24

ஊழலை மறைக்க விடியல் குரூப் மொழி பிரச்னை செய்கிறது என்றால், அவர்கள் மேல் ஏன் ஊழல் நடவடிக்கை எடுக்க தயங்குகிறீர்கள். எதும் எதிர்பார்ப்பு உண்டா அமைச்சரே?


Dharmavaan
மார் 22, 2025 18:15

கோர்ட் முட்டுக்கட்டை தயக்கம்


Palanivelu Kandasamy
மார் 22, 2025 07:57

எந்த மாநிலம் கடிதம் ழுத்தினாலும் இந்தியிலேயே பதில் வந்ததே. இப்போ என்ன, பயம் வந்திருச்சா? ஆர் எஸ் எஸ் கூட தாய் மொழியும் ஆங்கிலமும் வேண்டும் என்கிறது


Iyer
மார் 22, 2025 06:03

இந்திரா, ராஜீவ், மன்மோகன், முலாயம், லாலு, கருணாநிதி போன்ற ஊழல்வாதிகள் தங்கள் ஊழலை மறைக்க SECULARISM என்ற "சமாதானப்படுத்துதல்" கொள்கையை பின்பற்றினர். இப்போது SECULARISM அதிகமாக பயன் அளிப்பதில்லை. ஆகையால் மொழி வெறி, அவிழ்த்துவிடப்பட்டு இருக்கிறது.


சமீபத்திய செய்தி