உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமைச்சர் நிர்மலாவை சீண்டி வீடியோ: காமெடியன் குணால் அடுத்த சேட்டை

அமைச்சர் நிர்மலாவை சீண்டி வீடியோ: காமெடியன் குணால் அடுத்த சேட்டை

மும்பை: மஹாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை அவதுாறாக விமர்சித்த விவகாரத்தில் போலீசார் அனுப்பிய சம்மனையும் மீறி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சித்து நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா வெளியிட்டுள்ள 'வீடியோ' மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. சிவசேனாவைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர். மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த பிரபல 'ஸ்டாண்ட் அப் காமெடியன்' எனப்படும் நகைச்சுவை மேடை பேச்சாளர் குணால் கம்ரா, சமீபத்தில் நடத்திய நிகழ்ச்சியில் துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவாரை அவதுாறாக விமர்சித்தார்.இது, ஆளும் கூட்டணி அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே, குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய ஹாபிடட் ஸ்டூடியோவுக்குள் கடந்த வாரம் நுழைந்த சிவசேனா தொண்டர்கள், அதை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விதிகள் மீறி கட்டப்பட்டதாகக் கூறி அந்த ஸ்டூடியோவும் மாநகராட்சி அதிகாரிகளால் இடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அஜித் பவார் உள்ளிட்டோரை கிண்டல் செய்த விவகாரத்தில் நேரில் ஆஜராகும்படி கம்ராவுக்கு, போலீசார் இரண்டு முறை சம்மன் அனுப்பி இருந்தனர். இந்நிலையில், ஸ்டூடியோவை அடித்து நொறுக்கியதை கண்டித்தும், மத்திய பா.ஜ., அரசின் செயல்பாடுகளை கிண்டல் செய்தும் குணால் கம்ரா புதிய வீடியோவை நேற்று முன்தினம் வெளியிட்டார். பிரபல ஹிந்தி திரைப்படமான மிஸ்டர் இந்தியா படத்தில் வரும், 'ஹவாய் ஹவாயி...' என்ற பாடலின் வரிகளை மாற்றிப் பாடியுள்ள கம்ரா, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஜி.எஸ்.டி., வரி விதிப்பு குறித்து மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார். அதில், 'மத்திய அரசால் கட்டப்பட்ட பாலங்கள் இடிந்து விழுகின்றன; மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இது குறித்து கவலைப்படாமல் பாப்கார்னுக்கு வரி விதிக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களை விட அதிக வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளனர். ஆனால், அவர்களின் விருப்பங்களை மத்திய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது' என, குறிப்பிட்டுள்ளார்.ஏற்கனவே வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கூறியுள்ள குணால் கம்ரா, போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பேன் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Balasubramanian
மார் 27, 2025 16:38

முன்னொரு காலத்தில் பல்கிவாலா என்றொரு மகானுபாவன் இருந்தார் அவர் ஒவ்வொரு பட்ஜெட் வெளியிடப் பட்டதும் இங்கு இங்கே இது தேவை இது பிழை இது சரி இதில் திருத்தம் தேவை என்று புட்டு புட்டு வைப்பார் அதை பார்த்தும் கேட்டும் நிதி அமைச்சர்கள் சரி செய்து கொள்வார்கள்! அவரது பேசக் கேட்கவே ஊர் கூடும்! இத்தனைக்கும் அவர் பாராளுமன்ற உறுப்பினர் கூட இல்லை! பெரிய வக்கீல்! ஆனால் இன்று சசி தரூர் கவிதை வாசிக்கிறார். மற்றவர் கோஷம் போடுகிறார்! இவர் காமெடி செய்கிறார்! அழகாக இங்கு இது குறை இவை நிறை என்று நேர்த்தியாக பேசி தங்கள் எண்ணங்களை பதிவு செய்ய யாரும் இல்லை என்பதே உண்மை


Azar Mufeen
மார் 27, 2025 13:35

இவர் அந்த ஊர் சவுக்கு சங்கர் போல, அது சரி அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்டால் இதுதான் நிலைமை எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல


S.Martin Manoj
மார் 27, 2025 13:10

உண்மயதான பேசிருக்கார்.


கண்ணன்
மார் 27, 2025 12:36

இங்கு ஜி எஸ் டி பற்றி படிப்பறிவற்றோர் கருத்துப் பதிவிடுவது நல்ல நகைச்சுவை மேலும் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத உளறு வாய் காமெடியன்களால் நகைச்சுவை மேலும் கூடுகிறது!


Rajathi Rajan
மார் 27, 2025 12:00

மக்களை சந்தித்து ஓட்டு கேட்டு, பணம் செலவு செய்து, உணவு, துக்கம் பாராமல் உழைத்து கஷ்டப்பட்டு தேர்தலில் ஜெயித்து பாராளு மன்ற உறுப்பினர்கள் எல்லாம் மக்களுக்கா உழைக்கிறார்கள், ஆனால் மக்களை சந்தித்து ஓட்டு கேட்காமல் , பணம் செலவு செய்யம்மாள் , நன்றாக தின்னு விட்டும் கும்பகர்ணன் மாதிரி துங்கிவிட்டு, கொல்லைப்புறம் பாராளு உறுப்பினர் பதவிய வாங்கி, ஒட்டு போடாத மக்களை கொடூர எண்ணத்துடன் வரி கிஸ்தி என்று துன்புறுத்தினால் இப்படி தான் உண்மை மக்கள், கோமிய குடிக்காத, சாணியில் குளிக்காத மக்கள் இப்படித்தான் வீடியோ போடுவார்கள், அப்படியே போடவும், நோ எடிட்


இந்தியன்
மார் 27, 2025 08:15

குணால் கையில் பணம் அதிகம் வந்துவிட்டது...இனி இதுபோன்ற கருத்துக்களைதான் கூறுவார்...அதற்கு 200rs உபி க்களும் குதூகலிப்பர்...எல்லாம் என் தேசத்தின் தலையெழுத்து...ஆளும் அரசையே அவலப்படுத்தும் அளவிற்கு கருத்து சுதந்திரம் நம்நாட்டில் மட்டுமே பார்க்கலாம்... ஜெய் பாரத்...


Sivakumar
மார் 27, 2025 07:10

பிளவுபடாத தேசியவாத காங்கிரஸில் இருந்த அஜித் பவார் அன்று சொன்னதை தானே இன்று குணால் கம்ரா கூறியுள்ளார். அஜித் பவார் யாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லையே


pmsamy
மார் 27, 2025 06:39

Kunal you continue we support you


vivek
மார் 27, 2025 07:55

pmsamy will give his share rs 100 to kunal from his begging money


Kasimani Baskaran
மார் 27, 2025 05:28

கிண்டல் செய்கிறேன் என்று வன்மத்தை விதைப்பதில் இதுகள் முன்னால் நிற்கிறார்கள்.


Rajathi Rajan
மார் 27, 2025 11:51

வன்மத்தை கக்குவதில் அதும் அடிவயிற்றில் இருந்து வன்மத்தை கக்குவதில் உன்னை விடவா உலகில் வேற ஆட்கள், இருக்கிறார்கள், பிரியாணி சட்டி


Velan Iyengaar
மார் 27, 2025 03:32

////சிவசேனா தொண்டர்கள், அதை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்///// அடித்து நொறுக்குவது ஆர்ப்பாட்டத்தில் சேருமா இல்லை கலவரத்தில் சேருமா ?? பத்திரிகை தர்மம் எப்படி எல்லாம் காக்கப்படுகிறது என்று பாருங்கள் மக்களே


திகழ் ஓவியன்,Ajax, Ontario
மார் 27, 2025 08:02

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது...தர்மத்தை பற்றி அதர்மம் பேசுது.


Ganapathy Subramanian
மார் 27, 2025 10:15

நீங்கள் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த கலவரத்தை துப்புரவு தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் என்று உருட்டியதையும் போலீஸ் நடவடிக்கை எடுக்காததையும் போலவா?


Shekar
மார் 27, 2025 10:34

சவுக்கு சங்கர் வாடகை வீட்டில் இவனுக பண்ணுன சேட்டை உலக மகா கேவலம்.


புதிய வீடியோ