உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றிபெறும் திறன் கொண்ட வேட்பாளர்களை தேடுகிறோம் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி

வெற்றிபெறும் திறன் கொண்ட வேட்பாளர்களை தேடுகிறோம் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி

பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்கு, நாங்கள் தயாராகி வருகிறோம். வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளர்களை தேடுகிறோம், என பொது வினியோகத்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் கூறியதாவது:மாநிலத்தில் சில தொகுதிகளில், வெற்றி பெறும் வேட்பாளர்களை தேடுவது, கட்சிக்கு பெறும் சவாலாக உள்ளது. முதல்வர் சித்தராமையாவும், நில காங்கிரஸ் தலைவருமான, துணை முதல்வர் சிவகுமாரும், வேட்பாளர்களை தேடும்படி மாவட்ட பொறுப்பு அமைச்சர்கள், பார்வையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். வேட்பாளர்கள் இல்லாத தொகுதிகளில், வேறு கட்சிகளில் இருந்தாவது, வேட்பாளர்களை அழைத்து வந்து, வெற்றி பெற வைப்பது எங்களின் நோக்கமாகும். அமைச்சர்கள் தலைமையிலான மாவட்ட பார்வையாளர்கள் குழுக்கள், அவரவர் தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை, தாக்கல் செய்வர். காங்கிரஸ் மேலிடம் வேட்பாளர்கள் யார் என்பதை, முடிவு செய்யும். பிப்ரவரி 10ல் இது தொடர்பாக, ஆலோசனை நடக்கும் வாய்ப்புள்ளது. இந்த கூட்டத்தில், வேட்பாளர்கள் முதல் பட்டியல் அறிவிப்பது குறித்து முடிவு செய்யப்படலாம். பெலகாவியின், இரண்டு தொகுதிகளில் பலர் சீட் எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும், குறைந்தபட்சம் இரண்டு, மூன்று பேரின் பெயர்களை சிபாரிசு செய்துள்ளோம். பெலகாவியின் இரண்டு தொகுதிகளில், வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளர்களை, முதல்வரும், துணை முதல்வரும் முடிவு செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ