மாயமான பெண் சடலமாக மீட்பு
முசாபர்நகர்:உத்தர பிரதேசத்தில் காணாமல் போன 65 வயது மூதாட்டி உடல் கண்டெடுக்கப்பட்டது.உ.பி., மாநிலம் முசாபர் நகர் மாவட்டம் தவுலத்பூர் கிராமத்தில் வசித்தவர் சரோஜ்,65. கடந்த 12ம் தேதி மாயமானார். அவரது மகன் அவினாஷ் கொடுத்த புகார்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.இந்நிலையில், கால்வாய் ஒன்றில் சரோஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. தான் தாயை கொலை செய்து கால்வாயில் வீசியுள்ளனர் என அவரது உறவினர் பாவர் சிங் மீது, அவினாஷ் புகார் செய்தார்.கண்காணிப்புக் கேமராக்களில்- பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், பாவர் சிங் மீது கொலை வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.