உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் மாநாட்டில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,

காங்கிரஸ் மாநாட்டில் ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,

சாம்ராஜ்நகர், :காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டம் தொடர்பான மாநாட்டில், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சுநாத் பங்கேற்றது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சாம்ராஜ்நகர் ஹனுார் தொகுதி ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சுநாத். இவர் காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், ம.ஜ.த.,வில் இருந்து விலகி காங்கிரசில் இணைவார் என்றும், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, பேச்சு அடிபட்டது. ஆனால் மஞ்சுநாத் மறுத்தார்.இந்நிலையில் சாம்ராஜ்நகரில் அரசின் வாக்குறுதி திட்டம் தொடர்பான, மாநாடு நேற்று நடந்தது. முதல்வர் சித்தராமையா, சமூக நல அமைச்சர் மஹாதேவப்பா, சாம்ராஜ்நகர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., புட்டரங்கஷெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் ஹனுார் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சுநாத்தும் பங்கேற்று, ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.அமைச்சர் மஹாதேவப்பா பேசுகையில், ''சாம்ராஜ்நகரில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில், மூன்றில் வெற்றி பெற்றோம். ஹனுாரில் குறைந்த ஓட்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திரா தோற்றார். ஹனுார் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சுநாத், காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உள்ளார். கூடிய விரைவில் எங்களுடன் இருப்பார்,'' என்றார்.இதன்மூலம் மஞ்சுநாத் ம.ஜ.த.,வில் இருந்து விலகி, காங்கிரசில் விரைவில் இணைவார் என தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை