உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு

ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைப்பு

பெங்களூரு:வேலைக்காரப் பெண் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமின் மனு, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிப்புரா ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ரேவண்ணா, 66. இவர் வீட்டில் வேலை செய்த, முன்னாள் வேலைக்காரப் பெண்ணை கடத்தியதாக, கடந்த மாதம் 29ம் தேதி மைசூரு கே.ஆர்., நகர் போலீஸ் நிலையத்தில், ரேவண்ணா மீது வழக்குப்பதிவானது.இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் ரேவண்ணா மனுத் தாக்கல் செய்தார்.இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், மே 4ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவினர் ஐந்து நாட்கள், காவலில் எடுத்து விசாரித்தனர்.இதற்கிடையில் ஜாமின் கேட்டு, ரேவண்ணா தரப்பு வக்கீல் மூர்த்தி நாயக், மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம், விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்திருந்தது.

போலீஸ் காவல் நிறைவு

இதற்கிடையில் ரேவண்ணாவின் ஐந்து நாட்கள் போலீஸ் காவல், நேற்றுடன் முடிவடைந்தது. அவரை மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், எஸ்.ஐ.டி., அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அப்போது ரேவண்ணா ஜாமின் மனு மீதான விசாரணையும் நடந்தது.ரேவண்ணா தரப்பில் ஆஜரான வக்கீல் மூர்த்தி நாயக் வாதாடுகையில், ''எனது மனுதாரருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை. இதனால் அவருக்கு ஜாமின் கொடுக்க வேண்டும்,'' என்று கேட்டார்.எஸ்.ஐ.டி., வக்கீல் ஜெகதீஷ் கூறுகையில், ''போலீஸ் காவலில் இருந்தபோது, அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு, ரேவண்ணா சரியாக பதில் அளிக்கவில்லை. இந்த வழக்கில் மனுதாரர் முக்கிய நபர். அவருக்கு ஜாமின் கிடைத்தால், சாட்சியங்களை அழிக்க வாய்ப்பு உள்ளது,'' என, ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.

ரேவண்ணா கண்ணீர்

ரேவண்ணாவை பார்த்து, நீதிபதி சந்தோஷ் பட், ''விசாரணையின்போது, உங்களை அதிகாரிகள் துன்புறுத்தினார்களா?'' என கேள்வி எழுப்பினார்.இதற்கு ரேவண்ணா கூறியது:என்னை துன்புறுத்தவில்லை. எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. இதை அதிகாரிகள் சரியாக கவனிக்கவில்லை. கடந்த மூன்று நாட்களாக, இரவில் நான் துாங்கவில்லை. 25 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக உள்ளேன்.அரசியல் காரணங்களுக்காக, என்னை கைது செய்துள்ளனர். பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்யப்பட்டேன். போலீஸ் காவலில் இருந்தபோது, பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியதாக, என் மீது குற்றஞ்சாட்டுகின்றனர். என்னிடம் கேள்வி கேட்ட நிருபர்களுக்கு பதில் அளித்தேன். தவறே செய்யாமல் எப்படி பழியை ஏற்றுக்கொள்வது?இவ்வாறு ரேவண்ணா கண்ணீருடன் கூறினார்.

ஏழு நாட்கள்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமின் மனு மீதான விசாரணையை, நாளைக்கு (இன்று) ஒத்திவைத்தார். ரேவண்ணாவை 14ம் தேதி வரை, ஏழு நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.இதையடுத்து, ரேவண்ணாவை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

sankaranarayanan
மே 09, 2024 19:29

இந்தியாவில்மட்டும் எதிர்க்கட்சிகளின் நபர்கள் என்றாலோ முற்படுத்தப்பட்டோர் சமுதாயமக்கள் என்றாலோ காவல்துறை அதிகாரிகள் முதலில் நின்று அவர்களை கைது செய்யும் என்னதான் கதறி கதறி அழுத்தும் புரண்டாலும் அவர்களின் வார்த்தைகள் எவருடைய செவியிலும் போய் சேராறது இதுதான் நடப்பு


MADHAVAN
மே 09, 2024 16:36

கற்பழிப்பு, பலாத்காரம் இந்தமாதிரி ஆளுக்கு உடனே ஜாமீன் கிடைக்கும்


Ramesh Sargam
மே 09, 2024 12:51

சரியான தண்டனை ஒன்றுதான் இதற்கு முடிவு


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி