உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இதற்கு தான் சாதிவாரி கணக்கெடுப்பு வேணும்; அமித் ஷாவுக்கு சொல்கிறார் கார்கே!

இதற்கு தான் சாதிவாரி கணக்கெடுப்பு வேணும்; அமித் ஷாவுக்கு சொல்கிறார் கார்கே!

புதுடில்லி; மக்கள் நலத்திட்டங்களுக்கு மட்டுமே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார். ஜம்முகாஷ்மீர் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பிறகு நிதானித்து தமது பேச்சை தொடர்ந்த அவர், பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை உயிரோடு இருப்பேன் என்று பேசினார்.கார்கேவுக்கு பதிலடி தந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, இது கண்டிக்கத்தக்க பேச்சு என்று கூறி இருந்தார். இந் நிலையில் அமித் ஷாவின் கருத்துக்கு கார்கே பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறி இருப்பதாவது; மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்காக தான் நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்று வலியுறுத்துகிறோம். அதற்காக எங்களுக்கு தேசப்பற்று இல்லை என்று அர்த்தமாகாது. அவர்கள் (பா.ஜ.,) எப்போதும் நாட்டுக்கு எதிராகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் செயல்படுபவர்கள். ஆனால், காங்கிரஸ் கட்சியில் தேசப்பற்றுள்ளவர்கள் தான் உள்ளனர். எனவே அவர்கள் விமர்சனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anu Sekhar
அக் 02, 2024 22:20

மக்களுக்கு சேவை செய்யும் நீங்கள் எப்படி அவர்கள் பணத்தை அடித்தீர்கள் என்று சொல்லுங்கள்.


Nallavanaga Viruppam
அக் 02, 2024 17:21

ஜாதி வாரி கணக்கு கர்நாடகாவில் ஏற்கனவே எடுத்து வைத்து என்ன செய்தீர்கள்? கணக்கு எடுக்க வேண்டும் அதில் பெரும்பான்மை சமூகம் உங்களுக்கு வோட்டு போடும் என்று கணிகிறீர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை