டில்லியில் மொபைல் டவர் உபகரணங்கள் திருட்டு; சர்வதேச கடத்தல் கும்பல் கைவரிசை: 52 பேருக்கு காப்பு
புதுடில்லி: டில்லியில் மொபைல் டவர் உபகரணங்களை திருடி விற்பனை செய்து வந்த, சர்வதேச கடத்தல் கும்பலை சேர்ந்த 52 பேரை டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.டில்லியில் மொபைல் டவர் உபகரணங்கள் கடத்தல் கும்பல் திருடி, வெளிநாடுகளில் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து டில்லியில் பல்வேறு இடங்களில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது, மொபைல் டவர் உபகரணங்களை திருடி, ஹாங்காங் மற்றும் பிற நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, 52 பேரை டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கும்பல் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 5 ஆயிரம் யூனிட்களுக்கு மேல் கடத்தியுள்ளது என போலீசார் தெரிவித்தனர். இதன் பின்னணியில் சர்வதேச கடத்தல் கும்பல் இருக்கிறது. இதனால் கைது செய்யப்பட்டுள்ள 52 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.