உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அமெரிக்க நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் பிரதமர் மோடி; அமைச்சர் ஜெய்சங்கர்

அமெரிக்க நட்புக்கு மிகவும் முக்கியத்துவம் தரும் பிரதமர் மோடி; அமைச்சர் ஜெய்சங்கர்

புதுடில்லி: அமெரிக்காவின் நட்புக்கு பிரதமர் மோடி மிகவும் முக்கியத்துவம் அளிப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால் அமெரிக்காவில் இறக்குமதியாகும் இற்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரியை அதிபர் டிரம்ப் நடைமுறைப்படுத்தி உள்ளார். அண்மையில் சீனாவில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.அப்போது சீனா,ரஷ்யாவுடன் இந்தியா காட்டிய நெருக்கத்தைக் கண்ட டிரம்ப், மோடி தனது நண்பர், இந்தியா-அமெரிக்கா உறவு சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார். அவரின் கருத்தை பிரதமர் மோடியும் வரவேற்றார். அதே நேரத்தில் நியுயார்க்கில் நடக்க உள்ள ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ளாமல் தவிர்க்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு பதிலாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் செல்வார் என்றும் கூறப்படுகிறது. இந் நிலையில், அமெரிக்காவின் நட்புக்கு பிரதமர் மோடி மிகவும் முக்கியத்துவம் அளிப்பதாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறி உள்ளார். ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் இணக்கம் கொண்டவர். அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்து வருகிறோம். தற்போதைய சூழலில் இதை தவிர்த்து வேறு எதுவும் அதிகமாக என்னால் கூற இயலாது.இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !