உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் மோடி

புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக வரும் ஜூலை முதல் வாரம் பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி.பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு வரும் ஜூலை 06 , 07-ம் தேதிகளில் பிரேசிலில் நடக்கிறது. இந்த அமைப்பின் உறுப்பு நாடான இந்தியா பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.இதை ஏற்று பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக இரு நாட்கள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி பிரேசில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. இத்துடன் கானா, டிரினிடாட்-டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா என மேலும் 4 நாடுகளுக்கு மோடி அரசுமுறை பயணம் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பிரிக்ஸ் மாநாட்டின் பிரேசில் அதிபர், மற்றும் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

KR india
ஜூன் 27, 2025 11:58

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் புதியதாக இணைய ஆர்வம் தெரிவித்துள்ள, மேலும் பல முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கரன்சி விஷயத்தில் நம் நாட்டின் கொள்கை தெளிவற்றதாகவும், பலவீனமாகவும் உள்ளது. ஆரம்பத்தில், பிரிக்ஸ் கரன்சி-யில் இந்தியா கண்டிப்பாக இணைவோம் என்றனர். பின்பு, பிரிக்ஸ் கரன்சி-யில் இணைவதாக முடிவெடுக்கவில்லை. டாலர் மூலமே வர்த்தகம் செய்வோம் என்றனர். அதன் பிறகு, பிரிக்ஸ் கரன்சி எந்த நாட்டிற்கும் எதிரானது அல்ல என்றும், ஆசிய நாடுகளிடேயே வர்த்தகத்தை எளிமையாக்குவதற்கான ஒரு வழி முறை என்றனர். ஏன், இந்த பம்மல் ? தயக்கம் ? பிரிக்ஸ் கரன்சி விஷயத்தில் , பாரதீய ஜனதா கட்சியின் தயக்கம், சரியான நகர்வு அல்ல. எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கும், "சுய சார்பு" தன்மைக்கும், பிரிக்ஸ் கரன்சி மிகவும் கண்டிப்பாக தேவை. மோடிஜி அவர்களே, முன்வைத்த காலை, பின் வைக்காதீர்கள். சீனா மற்றும் ரஷ்யா அதிபர்களை போல் அஞ்சாநெஞ்சனாக இருக்க பாருங்கள். சிறிய நாடான பிரேசில் அதிபர் கூட, திட்டமிட்டபடி, பிரிக்ஸ் கரன்சி செயல் வடிவம் பெறும் என்று கூறி இருந்தார். ஐரோப்பா யூரோ டாலர் பயன்படுத்துவது போல், ஆசிய நாடுகள் "பிரிக்ஸ் கரன்சி"-யில் ஒன்றிணைய வேண்டும். அதுவுக்கே நம் நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது. பிரிக்ஸ் கரன்சி செயல் வடிவம் பெறவும், இந்திய பிரிக்ஸ் கரன்சியில் இணையவும், பிரதமர் மோடிஜி அவர்கள் உறுதியான நிலைப்பாட்டை "பயமில்லாமல்" எடுக்க வேண்டும். பிரிக்ஸ் கரன்சியில் இந்தியா இணையும் பட்சத்தில், இந்திய சரித்திரத்தில், பொன் எழுத்துக்களால், மோடிஜி யின் புகழ் பொறிக்கப்படும் வாய்ப்பை தவற விடாதீர்கள் இணைவோம் பிரிக்ஸ் கரன்சியில் இந்தியாவின் வளர்ச்சிக்கும், "சுய சார்பு" தன்மைக்கும், பிரிக்ஸ் கரன்சி மிகவும் கண்டிப்பாக தேவை. மோடிஜி அவர்களே, முன்வைத்த காலை, பின் வைக்காதீர்கள் ப்ளீஸ்


அப்பாவி
ஜூன் 27, 2025 11:27

ரெண்டு மூணு விருது வாங்காம வரமாட்டாரு.


முக்கிய வீடியோ