உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி கட்சி அலுவலகம் வருகை: நாளை தே.ஜ., கூட்டணி ஆலோசனை

மோடி கட்சி அலுவலகம் வருகை: நாளை தே.ஜ., கூட்டணி ஆலோசனை

புதுடில்லி: நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தே.ஜ. கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நாளை (ஜூன் 05) டில்லியில் நடக்கிறது. இதில் தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதா தளம் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடி தலைமை அலுவலகம் வருகை

லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி, இன்று ( ஜூன் 04) டில்லியில் பா.ஜ., தலைமை அலுவலகத்திற்கு 7:45 மணியளவில் வர உள்ளதாகவும், மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

spr
ஜூன் 05, 2024 07:01

மோடி மூன்றாம் முறை அவர் சொன்னதைப் போல நானூறு இடங்கள் பெற்றிருந்தால் சர்வாதிகாரி போலாகி செயல்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமில்லை அது நாட்டுக்கு நல்லது செய்யாது எனவே அவர்க்கு கடிவாளம் போட்டது சரியே ஆனால் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்றிருந்தால் நிலையான சமரசம் செய்து கொள்ளாத தேவையில்லாத ஆட்சி அமைந்திருக்கும் இப்பொழுது அது ஒரு பெரிய பிரச்சினை உடனிருக்கும் கட்சிகள் காங்கிரசின் ஆசை வார்த்தைகளில் மயங்கி இடம் மாறலாம் எனவே மோடியை "பிளாக் மெயில்" செய்ய வாய்ப்புள்ளது. பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டவர்களைத் தண்டித்திருந்தால் பாஜக மக்களிடையே நம்பிக்கை பெற்றிருக்கும் மோடியின் கையாலாகாத நிலை மற்றும் பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்ற விளம்பரம் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக அமைந்துள்ளது வெளிப்படை ஒரே நாடு ஒரே சட்டம் என்ற மோடியின் கனவுகள் நிறைவேறாமல் போகும்


Abdul Rahman
ஜூன் 05, 2024 02:24

திமுக நம்பகம் அற்ற கட்சி. பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். திமுக பதவிக்காக பிஜேபியை ஆதரிக்கும்.


J.V. Iyer
ஜூன் 05, 2024 02:13

அந்த ஸ்ரீராமனுக்கே வராத சோதனையா? நாட்டு வளர்ச்சிக்கு பாடுபடும் பிரதமர் மோடிஜியையும், பாஜகவையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. அடுத்தத்தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற வாழ்த்துக்கள்.


நாகேஷ்வரன்
ஜூன் 04, 2024 21:56

போய் தியானம்.பண்ணிட்டு மூணு நாள் கழிச்சு வரது


மேலும் செய்திகள்









புதிய வீடியோ