உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி: ஜூன் 8ல் மீண்டும் பதவியேற்பு

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி: ஜூன் 8ல் மீண்டும் பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : வரும் 8ம் தேதி 3வது முறையாக பிரதமர் ஆக நரேந்திர மோடி பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது. ஜனாதிபதி இல்லம் சென்ற பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 291 இடங்கள் கிடைத்துள்ளது. பா.ஜ., தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மீண்டும் தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=qqydggao&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மோடியை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தற்போதைய லோக்சபாவை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிகிறது.தொடர்ந்து வரும் 8 ம் தேதி( சனிக்கிழமை) அன்று மாலை மோடி 3வது முறையாக பதவி ஏற்றுக் கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. புதிய அமைச்சரவையும் பதவியேற்கும் எனத் தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு பிறகு உறுதியான தகவல் வெளியாகும்.

ஜனாதிபதியுடன் சந்திப்பு

கூட்டத்தின் முடிவில், ஜனாதிபதி இல்லம் சென்ற பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். பின்னர், தற்போதைய 17வது லோக்சபாவை கலைக்கவும் பரிந்துரை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

venugopal s
ஜூன் 05, 2024 23:46

ஐந்து வருடங்கள் தாக்குப் பிடிக்க மாட்டார் என்று தோன்றுகிறது!


ALAGAPPAN NACHIAPPAN NACHI
ஜூன் 05, 2024 16:47

வாழ்த்துக்கள் மோடி ஜி


Sivak
ஜூன் 05, 2024 16:28

மோடிஜிக்கு வாழ்த்துக்கள் ... காங்கிரஸினால் இந்துக்களுக்கு வரும் ஆபத்தை மக்களுக்கு உணர்த்தியதால்தான் இந்த வெற்றி கிடைத்தது ...


Jai
ஜூன் 05, 2024 16:22

தமிழ் மொழியின் பெருமை பற்றியும் தமிழர்கள் பற்றியும் இதுவரை எந்த பிரதமரும் வெளிப்படையாக பேசியதில்லை. மோடி அவர்கள் தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பேசி நம்மை கௌரவ படுத்தியுள்ளார்.


RAJ
ஜூன் 05, 2024 16:21

மாமனிதன் மோடி ெதடைகளை தகர்த்து வெற்றி கொள்வார்.,


Kundalakesi
ஜூன் 05, 2024 16:17

2028 ரொம்ப சிரமம் தான். அதற்கு இப்பொழுதே உழைக்க ஆரம்பிக்கணும்


veeramani hariharan
ஜூன் 05, 2024 15:47

வாழ்த்துக்கள்


Aps Ponnusamy
ஜூன் 05, 2024 15:43

வாழ்த்துக்கள் மோடி..தங்களின் 10 ஆண்டுகள் ஆட்சி மிக சிறப்பாக இருந்தது . இதை விட தங்களின் ஆட்சி மிக சிறப்பாக தங்களின் வருங்கால ஆட்சி செய்ய எல்லா வல்ல இறைவனை பிராத்திக்கிறேன் ..


Kasimani Baskaran
ஜூன் 05, 2024 15:13

மோடி 3.0 முக்கியப்பணிகள் 1 நீதித்துறை மறு சீரமைப்பு 2 தேசவிரோத கட்சிகளை சட்டத்துக்கு முன் நிறுத்தி விரைவாக தண்டித்தல் 3 பாகிஸ்தானை உடைத்து ஆக்கிரமித்த காஷ்மீரின் பகுதிகளை இந்தியாவுடன் இணைத்தல் 4 போதைப்பொருள் கடத்தும் கூட்டத்தை நாடு கடத்துதல் 5 அந்நிய குடியுரிமை வைத்திருப்போரின் இந்திய குடியுரிமையை நீக்குதல் 6 இந்துக்கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்தல் 7 கள்ளக்குடியேறிகளை நாடு கடத்துதல். 8 இளைஞர்களுக்கு இரண்டாண்டு கட்டாய இராணுவப்பணி. 9 திராவிட ஒழிப்பு தொகுப்பு இரண்டை தொய்வில்லாமல் நிறைவேற்றுதல்.


Ramanujadasan
ஜூன் 05, 2024 15:12

நான் இப்போதே என் prophecy சொல்லி விடுகிறேன் . 2047 வரை இந்தியாவின் அரசியல் வாதிகளின் தலைவராக - பிரதமராகவோ அல்லது அதிபராகவோ மோடி தொடர்ந்து நீடிப்பார் . இது சத்யம்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை