உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நரேந்திர மோடி தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து இன்று(ஜூன் 09) மாலை 7.15 மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு

பிரதமராக மோடி பதவியேற்றதை தொடர்ந்து இரண்டாவது நபராக ராஜ்நாத்சிங் பதவியேற்றார். இவர்களை தொடர்ந்து அமித்ஷா ,நிதின்கட்கரி,ஜெ.பி.நட்டா,சிவராஜ்சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் , மனோகர் லால் கட்டார்,குமாரசாமி,,பியூஸ் கோயல், தர்மேந்திர பிரதான் ஜித்தன்ராம் மாஞ்சி ,லாலன்சிங் ,சர்பானந்த சோனேவால்,வீரேந்திர குமார்,ராம் மோகன் நாயுடு ,பிரகலாத் ஜோஷி,ஜூவல் ஓரம்,கிரிராஜ்சிங்,,அஸ்வினி வைஷ்ணவ்,ஜோதிர் ஆதித்ய சிந்தியா,கஜேந்திர சிங் செகாவத்,அன்னபூர்ணா தேவி,,கிரண்ரிஜிஜூ, ஹர்தீப் சிங்பூரிமன்சுக் மாண்டவியா,கிஷன்ரெட்டி,,சிராக்பஸ்வான்,சி.ஆர்.பாட்டீல்,ராவ் இந்தர்ஜித்சிங்,ஜிதேந்திரசிங்,அர்ஜூன்ராம்மேகவால்,பிரதாப் ராவ்,ஜெயந்த் சவுத்ரி ,ஜிதின் பிரசாதா,ஸ்ரீபத் நாயக்,பங்கஜ் செளத்ரி,கிர்ஜன் பால் குர்ஜார்,ராம்தாஸ்அத்வாலே,ராம்நாத் தாக்கூர் ,நித்யானந்த் ராய்,அனுப்பிரியா பட்டேல்,சோமன்னா,சந்திரசேகர் பொம்மசனி,எஸ்.பி.,சிங் பஹேல்,ஷோபா கரண்டலேஜே,கீர்த்தி வர்தன்சிங்,பி.எல்.வர்மா, சாந்தனு தாக்கூர்,சுரேஷ்கோபி,முருகன்அஜய் டம்டா ,பண்டி சஞ்சய் குமார்,கமலேஷ் பஸ்வான்,,பஹிரத் செளத்ரி,சதீஷ் சந்திர தூபேசஞ்சய் சேட்,ரவ்னீத்சிங் பிட்டு,துர்கா தாஸ் உய்கி, ரக்சா கட்சே,சுகந்து மஜூம்தார்சாவித்ரி தாக்கூர்,தோஹன் சாஹூ,ராஜ்பூஷன் சவுத்ரி,,பூபதி ராஜூ ஸ்ரீனிவாச வர்மா,ஹர்ஷ் மல்ஹோத்ரா,நிமுபென் பாம்பனியா,முரளிதர் மோஹோல் ,ஜார்ஜ் குரியன்,பவித்ர மார்கரீட்டா உள்ளிட்ட 72 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். 36 கேபினட் அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர்கள் 36 பேர் என மொத்தமாக 72 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

6 முன்னாள் முதல்வர்கள் அமைச்சர்கள்

சிவராஜ்சிங் சவுகான், ராஜ்நாத்சிங், குமாரசாமி, மனோகர்லால் கட்டார், சர்பானந்தா சோனாவால், ஜித்தன்ராம் மஞ்சி ஆகிய 6 முன்னாள் முதல்வர்கள் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.

வெளிநாட்டு தலைவர்கள் பங்கேற்பு

பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் ஜக்நாத், செஷல்ஸ் அதிபர் வேவல் ராம்கலவன், பூடான் பிரதமர் ஷெரீன் டோப்கே ஆகிய நாடுகளின் தலைவர்கள். மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் கார்கேவும் இந்த விழாவில் பங்கேற்றார்.துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்,முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,முரளிமனோகர் ஜோஷி,ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி , கவுதம் அதானி,முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித்பவார்,காங்கிரஸ் தலைவர் மல்லிகாஜூன கார்கே, கங்கனா ரனாவத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், லோக்சபா முன்னாள் சபாநாயகர் ஓம் பிர்லா அமமுக பொதுசெயலர் தினகரன், முன்னாள் மத்திய அமைச்சர் வி.கே.சிங் மற்றும் பல்வேறு நாட்டு துாதர்கள் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர்.

திரை பிரபலங்கள் பங்கேற்பு

பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், அக்சய்குமார், தெலுங்கு நடிகர் நாகேந்திரபாபு, நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கவர்னர்கள் பங்கேற்பு

புதுச்சேரி மற்றும் ஜார்க்கண்ட் கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணன், கேரள கவர்னர் ஆரிப்கான் பங்கேற்னர்.பதவியேற்பு விழாவையொட்டி டில்லியில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுஇருந்தன. பதவியேற்பு விழாவில் 8000க்கும் அதிகமான அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

Sainathan Veeraraghavan
ஜூன் 10, 2024 16:36

தமிழ்நாட்டு மக்களை முட்டாள்களாகவே திமுக நினைக்கிறது. திராவிட கட்சிகளை தூக்கி எரிந்து விட்டு பிஜேபியை ஆட்சி அரியணையில் 2026 தேர்தலில் மக்கள் அமர்த்த வேண்டும் . செய்வார்கலா, தமிழக மக்கள் செய்வார்களா


Nirmala
ஜூன் 10, 2024 05:52

MODI Ji Rocked Opposition Shocked Keep Rock MODI Ji?????


Nirmala
ஜூன் 10, 2024 05:47

எல்லோரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பிஜேபி தோற்றுவிட்டது என்று யாரும் சொல்ல முடியாது. திமுக பிஜேபியுடன் போராடிப் போராடி தான் வென்றிருக்கிறது. இது ஒரு பெரிய வெற்றி என்று சொல்வதற்கு இல்லை. பிஜேபி லட்சக்கணக்கான ஓட்டுகளை பெற்று தான் முன்னுக்கு வந்திருக்கிறது. இது நிச்சயம் பிஜேபி தமிழ்நாட்டில் வளர்ந்திருப்பதை காண முடிகிறது. இதுதான் தமிழ்நாட்டில் பிஜேபிக்கு கிடைத்த வெற்றிக்கான முதல் படி. இது மேலும் வளர்ந்தால் இப்போது ஒடிசாவை போல பல வருடங்களாக கையில் திமுகவும் அதிமுகவும் பிடித்திருந்த ஆட்சியை பி ஜே பி பிடிக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.


Bharathi
ஜூன் 10, 2024 01:21

மக்கள் வரி பணத்துல டூர் போய் சமோசா திண்ணு உதவானிதி இன்பநிதி அவனுக்கு பிறக்க போற நிதிக்கும் வாழ்த்துப்பாடி வேஸ்ட்களை தேர்தெடுத்த தமிழ்நாட்டு மாக்களுக்கு வாழ்த்துக்கள்


Bharathi
ஜூன் 10, 2024 01:14

எதுக்கு இந்த சுயநலவாதி ரஜினியை கட்டிக்கொண்டு அழுகிறார்கள். இங்கேயும் ஓட்டிப்பார், சினிமா பொழப்பு போடறதுக்கு கட்டுமரம் குடும்பத்துக்கும் சொம்பு தூக்குவார்


s.sivarajan
ஜூன் 10, 2024 00:13

ஒட்டுமொத்த இந்திய மக்களும் நன்மையடையும் வகையில் நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல வாழ்த்துக்கள்


Mohan
ஜூன் 09, 2024 23:39

வாழ்த்துக்கள். இம்முறையும் தைரியமாக ஆட்சி செய்க. 2019 லிருந்து அடங்கி கிடந்த காஷமீர் பயங்கரவாதிகள் ஆட்டமா போட துவங்கி விட்டனர். யோகிஜியைப் போன்று அதை நசுக்கி அடக்கி விடவேண்டும் உடனே செயல் படுத்துங்க.


பாரதி
ஜூன் 09, 2024 23:22

மோடியை மக்கள் புரிந்துகொண்டாலே நாடு நன்றாக இருக்கும்.... வணங்குகிறோம்....


தேவசேனாபதி
ஜூன் 09, 2024 23:11

அடுத்த பிஜேபி தலைவர் அண்ணாமலை


Kasimani Baskaran
ஜூன் 09, 2024 22:05

மோடிஜிக்கு வாழ்த்துகள் புதிய சகாப்தம் படைத்தது ஊழல் மட்டைகளை வெளியே வரமுடியாமல் பிடித்து சிறையில் போடுங்கள். உள்ளே இருப்போர் பட்டியலில் இரண்டு முதல்வர்களோடு நின்றுவிடக்கூடாது.


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி