உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மழை , வெள்ளம் பாதித்த மாநிலங்களை நேரில் பார்வையிடுகிறார் மோடி

மழை , வெள்ளம் பாதித்த மாநிலங்களை நேரில் பார்வையிடுகிறார் மோடி

புதுடில்லி: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.கடந்த சில வாரங்களாக உத்தராகண்ட், சத்தீஸ்கர், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு - காஷ்மீர் உட்பட வட மாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது.மேக வெடிப்பு காரணமாக திடீரென கொட்டித்தீர்க்கும் மழையால், முக்கிய சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவை பலத்த சேதமடைந்துள்ளன. ஜம்மு - காஷ்மீரில் கடந்த 14ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.பஞ்சாபில் வெள்ளம் காரணமாக சட்லஜ், பியாஸ், ரவி ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவில் உள்ளது. வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் 29 பேர் உயிரிழந்துள்ளனர், 2.56 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இமாச்சலப் பிரதேசத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டுள்ளன. மண்டி, காங்க்ரா, சிர்மவுர், கின்னோர் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிம்லாவில் பயிற்சி மையங்கள் உட்பட அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளார், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Indian
செப் 06, 2025 08:56

தமிழ் நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் வரமாட்டோம் ..


Iyer
செப் 06, 2025 08:04

பார்வையிட்டு என்ன பயன். ? எந்த அரசும் இயற்கை பேரிடர்களின் 1. ஒவ்வொரு மாநிலத்திலும் 30 % அதிக வனப்பகுதிகளை உருவாக்கவேண்டும் 2. ரசாயன விவசாயத்தை முழுவதும் ஒழித்து இயற்கை விவசாயத்தை கட்டாயம் ஆக்கவேண்டும் மேற்கண்ட 2 செயல்களை செய்யாவிடின் வருடாவருடம் டிரில்லியன் டாலர் கணக்கில் நாம் இழப்போம்


முக்கிய வீடியோ