உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதி வீட்டில் பணம் விவகாரம் எதிரொலி; அமளியால் பார்லிமென்ட் ஒத்திவைப்பு

நீதிபதி வீட்டில் பணம் விவகாரம் எதிரொலி; அமளியால் பார்லிமென்ட் ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் சாக்கு பையில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பார்லிமென்ட் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு கடந்த ஜன.,31 முதல் பிப்.,13 வரை நடந்தது. இரண்டாவது அமர்வு கடந்த மார்ச் 10ம் தேதி துவங்கியது. ஏப்., 4 வரை நடக்க உள்ளது. கூட்டத்தொடர் துவங்கி முதல் நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=itl592k1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் இன்று (மார்ச் 24) காலை 11 மணிக்கு பார்லிமென்ட் இரு அவைகளும் கூடியது. லோக்சபா கூடியதும் டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் சாக்கு பையில் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை எச்சரித்தும் எம்.பி.,க்கள் கண்டுகொள்ளவில்லை. தொடர்ந்து கூச்சல் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.அதேபோல் ராஜ்யசபாவிலும் அவை கூடியதில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து ஜக்தீப் தன்கர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Jijin jiji
மார் 25, 2025 17:36

அதானே மத்திய அரசு எப்படி பொறுப்பேற்கும். திராவிட அரசு தான் காரணம் அதானே


K ELANGOVAN
மார் 25, 2025 07:33

அமலாக்கத் துறை எங்கே?


Raju c
மார் 28, 2025 14:57

நீதிபதி எதிர்க்கட்சி இல்லை .அவர் ஆளுங்கட்சி கூட்டாளி . அதனால் ED அனுப்ப முடியாது


Nagarajan S
மார் 24, 2025 19:34

நீதிபதியின் வீட்டில் பண மூட்டை இருந்தால் அதற்கு மத்திய அரசு எப்படி பொறுப்பாகும் ? இந்த கேடு கெட்ட எதிர்க்கட்சி எம் பிக்களுக்கு எப்படியாவது நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும் என்பதே குறி.


Ray
மார் 24, 2025 23:57

நாடாளு மன்றத்தை நடத்த வேண்டுமென்ற குறிக்கோள் அரசுக்கு இருந்தால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கத்தி கூச்சல் போட்டு அடக்காமலிருக்க பழகவேண்டும். ஆ ராசா எழுந்தாலே கூச்சல்தான்.


Sudha
மார் 24, 2025 19:13

இந்த கேடுகெட்ட அமளி வெளிநடப்பு ஒத்திவைப்பு எப்போ ஒழியுதோ அப்போ தான் இந்தியா முன்னேறும், கேடுகெட்ட இந்த செயலுக்கு ஜனாதிபதி சுப்ரீம் கோர்ட் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும், நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கேடுகெட்ட மனிதரை தேர்ந்தெடுத்ததை எண்ணி


Ray
மார் 24, 2025 19:30

எதிர் கட்சிக் காரன் நாட்டில் நடக்கும் அநீதிகளை அரசின் கவனத்துக்கு கொண்டுவரத்தானே கவன ஈர்ப்பு தீர்மானம்னு ஒன்று உள்ளது? அதை அனுமதித்து சம்பந்தப் பட்ட மந்திரி ஒரு நெத்தியடி பதிலோ இல்லை சால்ஜாப்பு மழுப்பலோ செய்துட்டா எதிர் கட்சி ஏன் கத்தி வெளிநடப்பு பண்ணப் போறாங்க? இந்த ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பேச்சே கூடாது அவர்கள் கொண்டுவரும் சட்ட திருத்தம் தீர்மானங்களுக்கு கைதூக்க வேண்டும் என்கிறார்கள் இதுதான் நல்ல ஜனநாயகமா குற்றத்தை விட அதை ஆதரிப்பது அபாயகரமானது. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த கேடுகெட்ட மனிதரை தேர்ந்தெடுத்ததை எண்ணி. யாரு தேர்ந்தெடுத்தா தேர்தல் கமிஷன் வரை எல்லாமே தகிடுதத்தம்.


Kulandai kannan
மார் 24, 2025 17:12

இந்த நபர் நீதிபதி ஆன தே அகிலேஷ் யாதவ் ஆதரவில்தான்.


naranam
மார் 24, 2025 17:07

எதிர் கட்சி எம் பி களுக்கு தாங்கள் எப்போதும் செய்யும் வேலையை இப்போ இந்த நீதிபதியும் செய்து விட்டாரே என்று ஒரே கோபம். அதுக்குத் தான் இந்த ரகளை!


Madras Madra
மார் 24, 2025 17:02

இது பட்டவர்த்தனமான பிட்டு நீதி வாங்க பணம் கொடுத்தது எதிர் கட்சிகள் ஆக இருக்கவே வாய்ப்பு அதிகம் எண்ணிக்கையற்ற வழக்குகளை வாய்தாக்களை எதிர் கொண்டு வருவது இண்டி கூட்டணி கட்சிகளே இப்ப பாராளுமன்றத்தை முடக்கி பிட்ட போட்டு நாடகம் ஆடுது இண்டி கூட்டணி கட்சிகள்


Nandakumar Naidu.
மார் 24, 2025 15:46

இதில் வேடிக்கை என்னவென்றால், கோடிக்கணக்கில் பணம் கொடுத்து பெயில் எல்லாம் எதிர் கட்சியில் அமர்ந்து கொண்டு போராட்டம் செய்கிறான். ஏன் அவைகளை ஒத்தி வைக்க வேண்டும்? இவர்களை தூக்கி வெளியில் வீச வேண்டியது தானே.


Nallavan
மார் 24, 2025 14:39

மோடி ஆட்சியில் அதிசயம் ஆனால் உண்மை-நீதிபதிக்கு பணம் கொடுத்து சட்டத்தை வளைத்துவிடலாம் EVM வைத்து தேர்தலில் வெற்றி பெறலாம், ED யை வைத்து எதிர்க்கட்சியை மிரட்டலாம் மணிப்பூர் செல்லாமலே, மாநிலத்தில் ஆட்சி பிடிக்கலாம் உள் நாட்டில் பிரச்னை இருந்தால் வெளிநாடு சென்று விடலாம்


ஆரூர் ரங்
மார் 24, 2025 15:25

அப்போ பொன்முடி தப்பித்ததும் செந்தில் பாலாஜி ஜாமீன் பெற்றதும் இப்படித்தானா?


M R Radha
மார் 24, 2025 16:06

200 ரூவாவுக்கு இன்னிக்கு எக்ஸ்ட்ரா வேணுமாம்


panneer selvam
மார் 24, 2025 16:26

It may be true , By using the same technic , Kanimozhi and Raja could come out of 2 G in Delhi Courts


Gopal
மார் 24, 2025 14:04

இந்த எதிர் கட்சி பசங்க தான் பணம் கொடுத்து இருப்பாங்க. திருடனுங்க.


முக்கிய வீடியோ