உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பணமோசடி வழக்கு: மலையாள நடிகரிடம் ஈ.டி., கிடுக்கி

பணமோசடி வழக்கு: மலையாள நடிகரிடம் ஈ.டி., கிடுக்கி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொச்சி: கேரளாவில், பணமோசடி வழக்கின் விசாரணைக்காக மலையாள நடிகர் ஜெயசூர்யாவும், அவரது மனைவியும், ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகினர்.

விசாரணை

கேரளாவின் திருச்சூரில், கடந்த 2022ல் 'சேவ் பாக்ஸ்' என்ற ஆன்லைன் செயலி மூலம் ஏலம் நடத்தப்பட்டதில் சிலர் தங்களின் பணத்தை இழந்ததாக அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இப்புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இந்த செயலியின் நிறுவனர் ஸ்வதிக் ரஹீம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 2023 ஜனவரியில் அவர் கைதானார். அவரிடம் நடத்திய விசாரணையில், முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டப்பட்ட நிதி பகுதி அளவில் திரைத்துறையில் முதலீடு செய்யப்பட்டது அம்பலமானது. இந்நிறுவனத்தின் விளம்பர துாதராக செயல்பட மலையாள பிரபல நடிகர் ஜெயசூர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதற்காக மோசடியாக திரட்டப்பட்ட பணத்தில் இருந்து பெரும் தொகை அவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வழக்குப்பதிவு

மேலும், ஜெயசூர்யாவின் மனைவிக்கும் பணம் வழங்கப்பட்டதாக விசாரணையில் தெரிந்தது. இதற்கிடையே இந்த விவகாரத்தில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ரஹீமின் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைத் தன்மையை ஆராயும் நோக்கில் நடிகர் ஜெயசூர்யா மற்றும் அவரது மனைவியிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை முடிவு செய்தது. இதன்படி, கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நேற்று இருவரும் நேரில் ஆஜராகினர். ரஹீமிடம் பெறப்பட்ட தொகை, பண பரிவர்த்தனை தொடர்பாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர்கள், அந்நிறுவனத்துடன் 75 லட்சம் ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழு த்திட்டதாகவும், அதில், 69 லட்சம் ரூபாய் வங்கி மூலம் பெற்றதாகவும், எனினும் மீதி தொகையை அந் நிறுவனம் வழங்காததால், அந்த விளம்பரம் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் கூறியதாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













புதிய வீடியோ