உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பண மோசடி வழக்கு: ஜார்க்கண்ட் அமைச்சர் ராஜினாமா

பண மோசடி வழக்கு: ஜார்க்கண்ட் அமைச்சர் ராஜினாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராஞ்சி: பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிறையில் உள்ள ஜார்க்கண்ட் காங்., அமைச்சர் ஆலம்கிர் ஆலம் அமைச்சர் பதவியிலிருந்து விலகினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்கதி மோர்ச்சா, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் சம்பய் சோரன் உள்ளார். இவரது அமைச்சரவையில் காங்.,கட்சியை சேர்ந்த ஆலம்கீர் ஆலம் அமைச்சராக உள்ளார். இவர் மீது ஊரக மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இவரது வீடு, அலுவலகத்தில் நடந்த ரெய்டில், ரூ. 37 கோடி ரொக்கப்பணம் சிக்கியது. கடந்த மே 15-ம் தேதி அமலாக்கத்துறை முன் ஆஜரானார். அப்போதே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் காங்., மேலிடம் உத்தரவிட்டதையடுத்து தனது அமைச்சர் பதவியையும், சட்டசபை காங்.,கட்சி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

vee srikanth
ஜூன் 12, 2024 10:49

பப்பு என்ன சொல்வார் ?


தாமரை மலர்கிறது
ஜூன் 12, 2024 01:31

காங்கிரஸ் இருக்கும் இடத்தில ஊழல் இருக்கும்.


Ramesh Sargam
ஜூன் 11, 2024 21:17

மற்ற மாநிலங்களில் கூட இப்படி பணமோசடி குற்றங்களில் பல முதல்வர்கள், அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் ஏன் இன்றுவரை சிறையில் அடைக்கப்படவில்லை? சாட்சியங்கள் இல்லையா, அவர்கள் செய்த குற்றங்களை நிரூபிக்க? இல்லை, சாட்சியங்கள் அழிக்கப்பட்டனவா?


Palanisamy Sekar
ஜூன் 11, 2024 21:12

அந்த காங்கிரஸ் அமைச்சர் சம்பாதித்த பணத்தை எவ்வளவு பகுதியை காங்கிரசுக்கு கொடுத்தார் என்கிற விசாரணையையும் விரைந்து விசாரிக்க வேண்டும். காங்கிரஸ் ஒருபோதும் திருந்தது என்பதற்கு இதுவே சாட்சி. இண்டி கூட்டணியில் இன்னும் இந்த திராவிட கட்சிகளின் அதிபர்கள் என்றைக்கு இப்படி உள்ளே சொல்வார்களோ நாடே எதிர்பார்த்து காத்திருக்கின்றது.


sankar
ஜூன் 11, 2024 20:11

இங்கே எப்போ கவுன்டவுன் ஸ்டார்ட் ஆகும்


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ