உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ‛மான்கி பாத் நிகழ்ச்சி 10 ஆண்டுகள் நிறைவு:

‛மான்கி பாத் நிகழ்ச்சி 10 ஆண்டுகள் நிறைவு:

புதுடில்லி: பிரதமர் மோடியின் மான்கி பாத் நிகழ்ச்சி 10 -ம் ஆண்டை நிறைவு செய்தது. இன்று 114-வது மான்கிபாத் நிகழ்ச்சியுடன் 11-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.ரேடியோ வாயிலாக பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சி கடந்த 2014-ம் ஆண்டு அக்.03ம் தேதி துவக்கப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‛மான்கி பாத்' நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களுடன் உரையாடி வருகிறார்.பிரதமர் மோடி உலகளாவிய ஒரு தலைவராக உள்ளார். அவரது பணியை சர்வதேச நாடுகள் பாராட்டுகின்றன. இதையடுத்து 2-வது முறையாக பா.ஜ. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்நிகழ்ச்சியில் சமூக மற்றும் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் பிரதமர் மோடியின் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி ஏப்.30-ம்தேதி உலகம் முழுதும் ஒலிபரப்பு செய்யப்பட்டது.

10 ஆண்டு நிறைவு

இந்நிலையில் 3-வது முறையாக பா.ஜ., ஆட்சி வந்த நிலையில் இடைவிடாமல் தொடர்ந்து ஒலிபரப்பாகி 10 ஆண்டை நிறைவு செய்து சாதனை படைத்துள்ளது. இன்று (அக்.27) 114 வது மான்கி பாத் நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. இதில் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி மக்களுடன் கலந்துரையாடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Suppan
அக் 27, 2024 15:59

அது மான் கி பாத் அல்ல . மன் கி பாத் மனதின் குரல்


Suppan
அக் 27, 2024 14:07

ஆமாம். இருநூறு ரூபாய் கொடுக்கல்ல. பிரியாணி க்வார்ட்டரும் இல்ல. இது ,, என்னய்யா ....


venugopal s
அக் 27, 2024 11:59

பாஜக ஆட்சியில் கோமாளித்தனங்களுக்கு பஞ்சமே இல்லை!


N.Purushothaman
அக் 27, 2024 10:04

இந்த பத்து ஆண்டுகளில் பல நல்ல மனிதர்களின் சேவையை கண்டறிந்து அதை இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு கொண்டு சென்று நேர்மறையான சூழலை உருவாக்கி கொண்டு இருக்கிறார் ....அதில் பல தமிழர்களும் அடங்குவர் ...பிரியாணி தின்பதையும் அதனுடன் மது அருந்துவதையும் சாதனையாக கருதும் திருட்டு திராவிடர்களுக்கு இதெல்லாம் விளங்கும் அளவிற்கு பகுத்தறிவு இருப்பதாக தெரியவில்லை ...


பாமரன்
அக் 27, 2024 09:19

காமெடி நிகழ்ச்சி... பத்து வருடங்களுக்கு... அதாவது கிட்டத்தட்ட நூறு தடவைக்கு மேல் நம்ம ஜி சொற்பொழிவு ஆத்து ஆத்துன்னு ஆத்தியிருக்காப்ல... இதனால் சல்லிக்காசு பிரயோஜனம் இல்லைங்கிறது வேறு விஷயம்...


Narayanan Muthu
அக் 27, 2024 09:05

கடந்த பத்து ஆண்டுகளில் எதற்கும் உதவாத இது போன்ற நிகழ்ச்சிகள் எத்தனையோ.


நிக்கோல்தாம்சன்
அக் 27, 2024 10:34

உதவா நிதியும் உங்களது நிகழ்ச்சியில் உள்ளனவே


சமீபத்திய செய்தி