வாசகர்கள் கருத்துகள் ( 1 )
காலை 10 மணிக்கு கூடும். 11 மணிக்கு எதிர்க்கட்சியினர் ரகளை மற்றும் வெளிநடப்பு. 11.30 அங்குள்ள உணவகத்தில் மீண்டும் கூடுவார்கள் வயிற்றை நிரப்ப. மக்கள் பிரச்சினை எதுவும் முடிவுக்கு வராது.
புதுடில்லி: பார்லிமென்ட் மழைகால கூட்டத்தொடர் வரும் 21ம் தேதி துவங்கி ஆக.,21 வரை நடைபெற உள்ளது.இது தொடர்பாக பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பார்லிமென்ட் மழைகால கூட்டத்தொடரை வரும் ஜூலை 21 ல் முதல் ஆக., 21 வரை நடத்துவதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். சுதந்திர தினத்தை கருத்தில் கொண்டு ஆக., 13, 14 ஆகிய தேதிகளில் கூட்டத்தொடர் நடைபெறாது என தெரிவித்து உள்ளார்.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா எடுத்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகு பார்லிமென்ட் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் வரும் 21ம் தேதி காலை 11 மணிக்கு பார்லிமென்ட் கூட உள்ள நிலையில் இந்த தொடரில் விவாதங்கள் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காலை 10 மணிக்கு கூடும். 11 மணிக்கு எதிர்க்கட்சியினர் ரகளை மற்றும் வெளிநடப்பு. 11.30 அங்குள்ள உணவகத்தில் மீண்டும் கூடுவார்கள் வயிற்றை நிரப்ப. மக்கள் பிரச்சினை எதுவும் முடிவுக்கு வராது.