உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூடா முறைகேடு வழக்கு: சித்தராமையாவுக்கு சம்மன் அனுப்பியது லோக் ஆயுக்தா

மூடா முறைகேடு வழக்கு: சித்தராமையாவுக்கு சம்மன் அனுப்பியது லோக் ஆயுக்தா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'மூடா ' வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். வரும் புதன் கிழமை அன்று ஆஜராக அதில் கூறப்பட்டுள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையாவின் சொந்த ஊர், மைசூரு தாலுகா, வருணா அருகே சித்தராமயனஹுண்டி கிராமம். 'மூடா' எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில் இருந்து அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகளை வாங்கி கொடுத்ததாக, சித்தராமையா மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம், மைசூரு சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில், முதல்வர் மீது வழக்குப்பதிய கவர்னரும் அனுமதி வழங்கினார்.இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், முதல்வர் மனு செய்தார். அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா தள்ளுபடி செய்தார்.

3 மாதம் 'கெடு'

இதற்கிடையில் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்திலும், ஸ்நேகமயி கிருஷ்ணா மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்ய, மைசூரு லோக் ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. விசாரணையை, மூன்று மாதத்துக்குள் முடிக்கவும் கெடு விதித்தது. இதையடுத்து, மூடா முறைகேடு வழக்கில் சித்தராமையா ஏ 1, பார்வதி ஏ 2, இவரது சகோதரர் மல்லிகார்ஜுன் சாமி ஏ 3, நிலம் விற்ற தேவராஜ் ஏ 4 ஆக சேர்க்கப்பட்டு வழக்குப் பதிவானது. மூடா வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்து இருப்பதாக, அமலாக்கத் துறையிலும், ஸ்நேகமயி கிருஷ்ணா புகார் செய்தார். அதன்படி சித்தராமையா மீது அமலாக்கத் துறையும் வழக்குப் பதிந்தது.விசாரணையை, மூன்று மாதத்திற்குள் முடிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டதால், மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். புகார்தாரர் ஸ்நேகமயி கிருஷ்ணா, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி குமார் நாயக்( தற்போது காங்., எம்.பி., ஆக உள்ளார்) முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாலய்யாபச்சே கவுடாவிடமும் விசாரிக்கப்பட்டது. முதல்வரின் மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி, நிலம் விற்ற தேவராஜு ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கும் லோக் ஆயுக்தா போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி இருந்தனர்.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வரும் புதன்கிழமை(நவ.,06) அன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Duruvesan
நவ 04, 2024 22:35

நான் பீப் சாப்பிட்டு சிவன் கோயிலுக்கு போவேன், திப்பு ஜெயந்தி கொண்டாடுவேன்னு சொன்ன நல்லவர்


KR
நவ 04, 2024 22:19

Kujli has set a precedent by continuing as CM even when he was jailed. So, Siddhu need not worry


Ramesh Sargam
நவ 04, 2024 21:01

நமது இந்திய ஹைதர் அலி காலத்து சட்டத்தில் நிறைய ஓட்டைகள் உள்ளன. அவற்றை நன்றாக பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பிப்பது எல்லோரும் அறிந்த ஒன்றே. அதிலும் குறிப்பாக அரசியல் குற்றவாளிகள் தப்பிப்பதும் நீங்கள் அறிந்ததே. முதலில் இப்பொழுது உள்ள சட்டத்தில் திருத்தம் செய்து, ஓட்டைகள் அடைக்கப்பட்டு, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப சட்ட திருத்தம் செய்யப்படவேண்டும். அப்பொழுதுதான் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட ஓரளவு வாய்ப்பு உள்ளது.


Palanisamy Sekar
நவ 04, 2024 20:01

ஜெ அவர்கள் மீது திட்டமிட்டு தண்டனையை வாங்கிக்கொடுத்த காங்கிரசின் அன்றைய இதே முதல்வர்..இதோ இப்போது பாருங்கள் ஏ 1 குற்றவாளியாக நிற்கின்றார். கர்மா சாதாரணமாக எண்ணிவிடாதீர்கள். என்றும் அது விடாது துரத்தும். சித்தராமையாவுக்கு இன்னும் ஜெயில் தண்டனை மட்டுமே மீதம் உள்ளது. நிச்சயம் அதனையும் ஏ 1 குற்றவாளி சித்தராமையா அனுபவிக்கனும். யாருக்கு சந்தோஷமோ இல்லையோ..எனக்கு மனதெல்லாம் மத்தாப்பு மாதிரி பூ பூக்குது. சித்தராமையாவின் துரோகம் திட்டமிட்டு செய்த தண்டனையும் தீர்ப்பும் விடாது துரத்தும். குன்கா அடுத்து ஏதாவது ஒன்றில் மட்டுவார்..அதற்கும் எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை