உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை

பெலகாவி: கணவர் வீட்டாரின் கொடுமையால், மனம் வருந்திய பெண்ணொருவர் தன் இரண்டு குழந்தைகளை, முதுகில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார்.பெலகாவி, ராய்பாகின், சுல்தான்புரா கிராமத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி, 26. இவருக்கும், மஹாராஷ்டிராவின், சாங்க்லியைச் சேர்ந்த நிதின் கிரவே, 32, என்பவருக்கும் 2016ல் திருமணம் நடந்தது. தம்பதிக்கு தீபிகா, 7, ரித்திகா, 4, என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.கணவர் வீட்டாரின் கொடுமையை தாங்க முடியாமல், சரஸ்வதி எட்டு மாதங்களுக்கு முன்பு மகள்களுடன், சுல்தான்புராவின் தாய் வீட்டுக்கு வந்து வசிக்க துவங்கினார்.மனதளவில் பாதிப்படைந்திருந்த சரஸ்வதி, நேற்று மதியம் தன் மகள்களை முதுகில் கட்டிக்கொண்டு, கிராமத்தில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.ஹாரோகேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி