உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 2 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை

2 பிள்ளைகளுடன் தாய் தற்கொலை

துமகூரு: தனது இரண்டு பிள்ளைகளுடன் ஏரியில் குதித்து தாய் தற்கொலை செய்தார்.துமகூரு மதுகிரி ரூரல் பகுதியில் உள்ள ஏரியில் நேற்று காலை ஒரு பெண், இரண்டு பெண் குழந்தைகளின் உடல்கள் மிதந்தன. ஏரிக்கு குளிக்க சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மதுகிரி போலீசார் அங்கு சென்றனர். ஏரியிலிருந்து மூன்று பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.போலீசார் நடத்திய விசாரணையில், மதுகிரி டவுனை சேர்ந்த ஹசினா, 25 என்பவர், மகள்கள் அசிமா, 8, அல்மிசா, 3 ஆகியோருடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்தது தெரிந்தது. காரணம் தெரியவில்லை.குடும்ப தகராறில் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !