உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., அலுவலக லிப்டில் சிக்கிய எம்.பி.,

பா.ஜ., அலுவலக லிப்டில் சிக்கிய எம்.பி.,

பெங்களூரு : பா.ஜ., அலுவலகத்துக்கு வந்த எம்.பி., உமேஷ் ஜாதவ், அரைமணி நேரத்துக்கும் மேலாக லிப்டில் சிக்கி அவதிப்பட்டார்.கலபுரகி பா.ஜ., - எம்.பி., உமேஷ் ஜாதவ், நேற்று காலையில் பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அதிகாரிகள், ஆதரவாளர்கள் சிலருடன் லிப்டில் சென்றார். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டதால், 'லிப்ட்' பாதியில் நின்றது.அரைமணி நேரத்துக்கும் மேலாக, லிப்டில் தவித்தார். மின்சாரம் வந்தும் லிப்ட் இயங்கவில்லை. அதன்பின் தரைதளத்தில் லிப்ட் கதவு பாதி திறந்தது. மிகவும் கஷ்டப்பட்டு எம்.பி.,யும் மற்றவர்களும் கஷ்டப்பட்டு வெளியே வந்தனர். தொழில்நுட்ப பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு லிப்ட் சரி செய்யப்பட்டது. இச்சம்பவத்தால், கட்சி அலுவலகத்தில் சிறிது நேரம், பரபரப்பான சூழ்நிலை நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை