உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மூடா முறைகேடு; கர்நாடக முதல்வருக்கு சிக்கல்; 3 மாதம் கெடு விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி

மூடா முறைகேடு; கர்நாடக முதல்வருக்கு சிக்கல்; 3 மாதம் கெடு விதித்து சிறப்பு நீதிமன்றம் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரூ: மூடா முறைகேடு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.முதல்வர் சித்தராமையா மீதான மூடா எனும் மைசூரு மேம்பாட்டு ஆணைய முறைகேடு விவகாரம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அதிகாரம் துஷ்பிரயோகம் செய்து, முதல்வர் சித்தராமையா அவரது மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனை ஒதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேடு தொடர்பாக பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆபிரஹாம், மைசூரு லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்திருந்தார். அதில், முதல்வர் மீது விசாரணை நடத்த அனுமதி கோரி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டிடம் புகார் அளித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2xya5i6x&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனை ஏற்று முதல்வர் மீது விசாரணை நடத்த, கவர்னர் அனுமதி அளித்தார். கவர்னர் அளித்த அனுமதியை ரத்து செய்யும்படி, உயர்நீதிமன்றத்தில் முதல்வர் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.இதற்கிடையில், மூடா முறைகேடு தொடர்பாக, முதல்வர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி, ஸ்நேமயி கிருஷ்ணா, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.விசாரித்த நீதிபதி, முதல்வர் சித்தராமையா மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்க லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டார். மேலும், 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. இது ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், சித்தராமையாவின் முதல்வர் பதவிக்கும் ஆபத்தை உண்டாக்கியுள்ளது.இதனிடையே, முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என்று பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sam Dev
செப் 26, 2024 00:55

வாய்ப்பே இல்ல ராஜ தாமரை மலராது பாவம் மோடியின் பரிதாபங்கள்,


Ramesh Sargam
செப் 25, 2024 20:24

சித்தராமையா அவரது மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனை முறையில்லாமல் ஒதுக்கியதற்கு, அவருக்கு சீக்கிரம் பாரப்பன அக்ராஹாரா சிறையில் ஒரு இடம் ஒதுக்கப்படும்.


VENKATASUBRAMANIAN
செப் 25, 2024 19:04

இவருக்கு தண்டனை வாங்கி கொடுத்தால் மட்டுமே நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும்


nagendhiran
செப் 25, 2024 18:49

மாட்டிக்கிட்ட பங்கு?


sankaranarayanan
செப் 25, 2024 18:35

இவ்வளவு காலம் கடந்தும் இன்னும் கால அவகாசம் எதற்கு கோர்ட்டார் அவர்களே மூன்று நாட்களே போதும் வழக்கு முற்றிலும் முடிந்துவிடும் இது அப்பட்டமான ஆதாரங்களுடன் நீதிமன்றத்திக்கு சமர்ப்பித்த வழக்கு


Oru Indiyan
செப் 25, 2024 18:32

தி மு க நண்பர் வேற எப்படி இருப்பார்


vadivelu
செப் 25, 2024 17:46

கர்நாடாகாவின் போர்ஜெரிவால்


Lion Drsekar
செப் 25, 2024 17:08

கொசு கரப்பான் ஈக்கள் இவைகளால் யாருக்கு நன்மை என்று தெரியவில்லை, தேனீக்களைப்போல் காட்டிக்கொண்டு , மூங்கில்மரங்களை ஒட்டை போட்டு மூங்கில் அறத்தையும் அறவே அழிக்கும் வண்டுகள் , கண்ணுக்கு விருந்தாக , செவிக்கு விருந்தாக இருக்கும் பறவைகளாக இருந்தால் உலகுக்கும் நன்மை, வந்தே மாதரம்


sugumar s
செப் 25, 2024 17:03

people elect only fraudulent politicians to rule them by taking few bucks. they can be rest assured, by the time he comes out 140 houses may get allotted to his kith and kin


Barakat Ali
செப் 25, 2024 17:01

நீங்கள் ஊழல் செய்திருக்கிறீர்கள் என்று மக்களே நினைக்கிறார்கள் .... இந்த நேரத்தில் கவர்னர் சதி, பாஜக சதி என்று நீங்க சொன்னா மக்களின் பாசம், நம்பிக்கை ஆட்டோமெட்டிக்கா பாஜக பக்கம் திரும்பும் .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை