உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி பலி: மும்பையில் சோகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மும்பையில், தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்த நான்கு பேர், விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.மும்பையின் நக்படா பகுதியில் உள்ள ஓட்டுநர் பயிற்சிபள்ளி அருகே புதிதாக கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இன்று மதியம் 12:29 மணியளவில் அங்குள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 5 பேர் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்களை விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதில், ஹசிபல் ஷேக்(19), ராஜா ஷேக்(20), ஜியாவுல்லா ஷேக்(36) மற்றும் இமாந்து ஷேக்(38) ஆகியோர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்தனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Barakat Ali
மார் 09, 2025 20:26

இது போன்ற சம்பவங்கள் முன்னேறிய மாநிலமான தமிழகத்திலும் நடந்துள்ளன .... ப்ரோடோகால் இல்லையா ???? அல்லது பின்பற்றப்படவில்லையா ????


naranam
மார் 09, 2025 19:11

இது நாட்டில் பல இடங்களில் நடந்துள்ளது. சுத்தம் செய்ய தொட்டியில் இறங்குவதற்கு முன் தொட்டியில் நல்ல காற்றோட்டம் ஏற்படுத்தவேண்டும். இதற்கு 'எக்ஸாஸ்டு' ஃபான் ( exhaust fans for good ventilation) பொருத்தி நச்சு வாயுக்களை பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும். பிறகு தேவையான அளவு பிராண வாயு உள்ளதா என்று கருவி ( gas test) மூலம் கண்டறிய வேண்டும். இதன் பிறகு தொட்டியில் இறங்கினால் உயிரிழப்பு ஏற்படாது. இந்தப் பாதுகாப்பு முறைகளைப் பின் பற்றினால் விலை மதிப்பற்ற மனித உயிர்களின் இழப்பைத் நிச்சயம் தவிர்க்க முடியும்.


अप्पावी
மார் 09, 2025 18:38

வடக்கேருந்து நிறைய மும்பைக்கும் ரயில் உட்டு பஞ்சம் பொழைக்க அனுப்பிடறாங்க. இதல்லாம் ஒரு வேலைன்னு கணக்கில் காட்டிடுவாங்க.


Apposthalan samlin
மார் 09, 2025 17:39

விடியல் திருட்டு திராவிடம் என்று யாரும் வராதீர்கள் இது பம்பாயில்


Velan Iyengaar,Sydney
மார் 09, 2025 19:08

கனடா, லண்டன் அங்கே எல்லாம் பின்பற்றப்படும் உங்க மாடல் மும்பை என்றவுடன் இவ்ளோ கதறல்...அந்த பயம் இருக்கட்டும்...200 ரூவா ஊ ஃபீஸ்


Ray
மார் 09, 2025 17:19

இவர்களது பூர்வீகம் ?????????