உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அணு ஆயுத திட்டத்தை ஈரான் நிறுவனத்திற்கு விற்க முயற்சி; போலி விஞ்ஞானியிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்

அணு ஆயுத திட்டத்தை ஈரான் நிறுவனத்திற்கு விற்க முயற்சி; போலி விஞ்ஞானியிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல்

மும்பை: அணு ஆயுத திட்டத்தை ஈரான் நிறுவனத்திற்கு விற்க முயன்றது, போலீசாரால் கைது செய்யப்பட்ட 60 வயது போலி விஞ்ஞானியிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக போலீசார் கூறியதாவது; பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானியாக ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த அக்தர் உசேன் குத்புதீன் அகமது,60, என்பவர் நடித்துள்ளார். இவரும், இவருடைய சகோதரர் உசேன்,59, என்பவரும் அடிக்கடி டெஹ்ரான் சென்றுள்ளனர். அங்கு இந்தியா மற்றும் துபாயில் உள் ஈரான் தூதரகங்களுக்கு பலமுறை சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் விஞ்ஞானிகளைப் போல நடித்து, ஈரானைச் சேர்ந்த நிறுவனத்திடம், ஆராய்ச்சி ஒத்துழைப்பு என்ற பெயரில், விபிஎன்னை பயன்படுத்தி லித்தியம்-6 அணுஉலை திட்டம் குறித்த தகவலை விற்க முயன்றுள்ளனர். அதுமட்டுமில்லாமல், மும்பையில் உள்ள ஈரான் தூதரையும், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி போல் நடித்து ஏமாற்றியுள்ளனர். அக்தர் மும்பை போலீசாராலும், அவரது சகோதரர் உசேன் டில்லி போலீசாராலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 10க்கும் மேற்பட்ட வரைபடங்கள், அணு ஆயுத தரவுகள், போலி பாஸ்போர்ட்டுகள், மற்றும் போலி பாபா அணுஆராய்ச்சி மையத்தின் அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kasimani Baskaran
நவ 06, 2025 04:07

இது போன்ற கேடிகளை அடையாளம் கண்டு ஒழித்துக்கட்டுவது நாட்டுக்கு நல்லது.


SENTHIL NATHAN
நவ 05, 2025 20:51

போலி ஆயுத திட்டம் வாங்குபவர்களுக்கு தானே நட்டம்??


M Ramachandran
நவ 05, 2025 20:37

இந்த மாதிரி நாடு மாறிகளுக்கு நீதி மன்றம் இரக்கம் காட்ட கூடாது.திருந்தாத ஜென்மங்க்ளுக்கு தூக்கு தண்டனை அவசியம். அவர்கள் விரும்பும் நாட்டின் சட்ட திட்டத்தின் படி சாகும் வரை கசை யடி. பசியோடு இருக்கும் சிங்கம் அல்லது புலி கூண்டில் அனுப்புதல் சிறந்த தாக மற்ற கூட்டத்திற்கு முன் உதாரணம். ஒருவன் செய்யும் அயோக்கிய தனத்திற்கு அந்த சமூகத்திற்கே கெட்ட பெயர் பெயர்.


M Ramachandran
நவ 05, 2025 20:29

திங்கறது இங்கே. அந்த மதத்தினரில் ஏன் சில பேர் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் நினைக்கிறார்கள்.


RAMESH KUMAR R V
நவ 05, 2025 19:52

தேசதுரோகிகள் shut them without investigation.


kumaran
நவ 05, 2025 19:39

நம்முடன் சகோதர மனப்பான்மையுடன் பேசும் இவர்கள் நம் நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் போதெல்லாம் இவர்கள் பங்களிப்பு அதிமாகவே இருக்கிறது.


V Venkatachalam, Chennai-87
நவ 05, 2025 20:50

இவன்களுக்கு வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன், தி சூப்ரீம் லீடர் தான் சரியான தீர்ப்பு வழங்குவார். அப்பதான் இந்த நயவஞ்சக ஆளுங்க இனிமே முளைக்கவே மாட்டானுங்க. விசாரணை முடிஞ்சப் புறம் ஷூட் பண்ணிடனும். அவ்வளவுதான் நோ மோர் டாக் அபௌட் ஹிம்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை