உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹாரன் அடித்தால் இசை ஒலிக்கும்: நிதின் கட்கரி புதிய திட்டம்

ஹாரன் அடித்தால் இசை ஒலிக்கும்: நிதின் கட்கரி புதிய திட்டம்

புதுடில்லி : வாகனங்கள் ஒரு பக்கம் காற்று மாசை ஏற்படுத்துவதுடன், ஒலி மாசையும் ஏற்படுத்துகின்றன. இந்த மாசில் இருந்து விடுதலை தரும் புதிய திட்டத்தை, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது: நாட்டில் ஏற்படும் காற்று மாசில், 40 சதவீதம், வாகனங்களால் ஏற்படுகிறது. வாகனங்கள் ஏற்படுத்தும் காற்று மாசை தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.பசுமை எரிபொருள்கள் பயன்படுத்துவதுடன், எத்தனால், மெத்தனால் போன்றவற்றை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. ஒலி மாசை குறைக்கும் வகையில் புதிய சட்டம் இயற்ற திட்டமிட்டுள்ளோம். அதன்படி, வாகனங்களில் ஹாரன்களில், இனி இந்திய இசைக் கருவிகளின் இசையே ஒலிக்க வேண்டும்.புல்லாங்குழல், தபேலா, வயலின், ஹார்மோனியம் போன்ற இசைக் கருவிகளால் உருவாக்கப்படும் இசையே, ஹாரனாக பயன்படுத்த வேண்டும். இதனால், ஒலி மாசு குறைவதுடன், பயணங்கள் மனதுக்கு இதமளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Kulandai kannan
ஏப் 23, 2025 17:09

ஒரு வாரம் ஹாரனுக்குத் தடைவிதித்தால், வாகன ஓட்டிகள் கவனமாக ஓட்டி, விபத்துகள் பெருமளவு குறையும். 1970களில் தமிழ்நாட்டில் போலீஸ் ஸ்டிரைக் செய்தபோது குற்றங்கள் குறைந்தது வரலாற்று உண்மை.


தேவமூர்த்தி
ஏப் 23, 2025 09:30

ஆம்புலன்சுக்கு தாரை, தப்பட்டை, மற்றும் சங்கு ஒதுக்கப்பட வேண்டும்.


இசைவேந்தன்
ஏப் 23, 2025 09:29

தமிழகத்தில் தமிழக இசைக்கருவிகள் மட்டுமே இசைக்கப் பட வேண்டும்.


அப்பாவி
ஏப் 23, 2025 09:26

பலே திட்டம். இதையே ஏரோபிளேன்களுக்கும் கொண்டு வரலாம். அப்புறம் ரயில்களுக்கும் நிச்சயமா தேவை. எதோடு எது மோதும்னே தெரியலை.


Sampath Kumar
ஏப் 23, 2025 09:25

ரைட் மக்கள் தொகை குறைக்கவும் மருத்துவமனைகளுக்கு வருமானம் அதிகரிக்கவும் அய்யா திட்டம் போட்டு உள்ளார் எல்லாரும் ஜோரா கைதட்டுங்க ??/ கார் சத்தம் அலறும் சத்தமாக இருந்தாலும் நம்ம ஆளுக நகர மாட்டுணுக்க மாட்டும் நகரத்து இப்போ சங்கீத இசையும் கேக்கவே வேண்டாம்


अप्पावी
ஏப் 23, 2025 09:12

விபத்து நடந்தா சங்கு ஊதற மாதிரி சட்டம் போடுங்க எசமான்.


Anbuselvan
ஏப் 23, 2025 09:08

கொஞ்சம் தெர்மோகோல் வாடையும் - பூஜை போட்ட ரோட்டிற்கு மறுபடியும் பூஜை போடும் வாசனையும் அடிக்கிற மாதிரி இருக்குதோ


சுந்தர்
ஏப் 23, 2025 08:56

நம்ம ஆளுங்க பீப்பீ...பீப்பீ... என்று இசை சப்தத்தையும் முழக்கி விடுவரே?


Kalyanaraman
ஏப் 23, 2025 07:20

அனைத்து மாநில அரசுத் துறையின் அதிகாரிகளின் வாகனங்களிலும் வடசென்னை பகுதியில் எங்கும் வாகனங்களிலும் சட்டத்துக்கு புறம்பாக இயக்கத்தில் உள்ள ஹாரன்களை உடனடியாக அகற்ற வேண்டும்


கூறமுதலீ
ஏப் 23, 2025 07:15

அப்புறம் எது பாட்டு எது ஒரு வண்டி ஓட ஹாரன் என்னன்னே தெரியாது ஒழுங்கா இப்போ இருக்கிற ஹாரனே இருக்கட்டும் பா ரொம்ப அடிக்க வேணாம்னு மட்டும் கட்டுப்படுத்துங்கள் போதும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை