உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆண் - பெண் சமம் அல்ல முஸ்லிம் லீக் தலைவர் சர்ச்சை பேச்சு

ஆண் - பெண் சமம் அல்ல முஸ்லிம் லீக் தலைவர் சர்ச்சை பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மலப்புரம்: கேரளாவைச் சேர்ந்த ஐ.யு.எம்.எல்., எனப்படும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலர் சலாம், ஆணுக்கு பெண் சமமானவர்கள் கிடையாது என, நேற்று கூறினார்.கேரளாவில், மார்க். கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எனப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் ஐ.யு.எம்.எல்., அங்கம் வகிக்கிறது. இதன் பொதுச்செயலராக இருக்கும் சலாம், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஆண்களும், பெண்களும் சமமானவர்கள் அல்ல. ஒலிம்பிக்கில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. ஆணும், பெண்ணும் வேறுபட்டவர்கள் என்பதால் தானே இது இருக்கிறது.ஆணும், பெண்ணும் எல்லா வகையிலும் சமம் என்று சொல்ல முடியுமா? உலகம் அதை ஏற்றுக்கொண்டிருக்கிறதா? ஆண் - பெண் சமம் என்று சொல்பவர்கள், கண்களை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என்பவர்கள். ஐ.யு.எம்.எல்., இரு பாலருக்கும் சமமான மற்றும் பாலின நீதிக்கு ஆதரவாக உள்ளது. ஆனால் பாலின சமத்துவத்தை ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி கேரளாவில் சர்ச்சையானது. சலாமின் இந்த கருத்தால், கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

AMLA ASOKAN
ஜன 30, 2025 20:16

இங்கு பதியப்படும் விமர்சனங்களில் ஹிந்து மதம் குறித்து யாரும் குறை கூறுவதில்லை . ஆனால் இஸ்லாம் பற்றி சரி வர தெரியாமலும் , மேலோட்டமான புரிதலுடன் தேவையற்ற கேவலமான கருத்துக்கள் வெளியிடப் படுகின்றன . இந்தியா ஆணாதிக்கம் நிறைந்த நாடு . ஒரு கணவன் மனைவியை அடிப்பதற்கும் , சேர்ந்து வாழ முடியாத நிலையில் விவாகரத்து ஏற்படுவதற்கும் மதத்திற்கும் சம்பந்தமேயில்லை . ஹிந்து முஸ்லீம் பகைமையை வளர்க்க எழுதப்படும் விமர்சனங்களை அறிவுள்ளவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்


ஆரூர் ரங்
ஜன 30, 2025 14:44

இஸ்லாம் எவ்வளவோ நல்ல கருத்துக்களை கூறியுள்ளது. சிற்சில பழைய கருத்துக்கள் காலத்துக்கு ஒவ்வாதவையே என எண்ணுகிறேன்.. 1 . இறைவனை ஆணாக எண்ணுவது ஆணாதிக்க சிந்தனையை ஏற்படுத்துகிறது 2. பெண்களுக்கு சொத்துரிமை, குலா எனும் விவாகரத்து உரிமை அளித்த சிறப்புக்கள் உண்டு என்றாலும் மனைவியை கணவன் அடிக்கலாம் என்பது. 3. முதிய மனைவியை விவாகரத்து செய்து தவிக்க விட்டு ஜீவனாம்சம் தராமலிருக்கலாம் என்பது. 4. பெரும்பாலான ஜமாத்கள் ஆண்களின் பேச்சை ஏற்குமளவுக்கு பெண்களின் சாட்சியங்களை ஏற்பதில்லை. ஏனெனில் பெண்கள் ஜமாஅத்துக்கு தலைமை வகிப்பதை ஆண்கள் ஏற்பதில்லை. ஆக தொழுகையிடத்தில் உள்ள சமத்துவம் குடும்பத்திலும் சமூகத்திலும் இல்லையே. இது தூய இஸ்லாமில்லை. மாற்றங்கள் தேவை தோழர் சலாம் அவர்களே.


Ramesh Sargam
ஜன 30, 2025 13:11

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பொதுச்செயலர் சலாமுக்கு வீட்டில் என்ன பிரச்சினையோ...? அதை வீட்டில் வெளிப்படுத்த தைரியமில்லாமல், இப்படி வெளியிடத்தில் பொதுவாக பேசியிருக்கிறார். பேசிய அன்று அவர் வீட்டில் என்ன நடந்ததோ அவருக்கு. செம உதைதான்...


nisar ahmad
ஜன 30, 2025 12:36

ஆமாம்பா ஆணும் பெண்ணும் சமம் ஆண் குழந்தை பெற்றுக்கொள். இங்கே ஆண்கள் கிரிக்கெட்டுக்கு தரப்படும் பணம் மதிப்பு பிரச்சாரம் டீ வியில் லைவ் ரிலே ஏன் பெண்கள் கிரிக்கெட்டுக்கு தரப்படுவதில்லை இதையெல்லாம் ஆதரிச்சிட்டு பேசுங்க ஆரூராங் இஸ்லாத்தில் பெண்கள் மெண்மையானவர்கள் என்றுதான் கூறுகிறது ஜாதி கொடுமை பண்ணி கொல்ல சொல்லவில்லை பேண்களை பற்றி உங்க புராணங்கள் என்ன சொல்லுதுன்னு நீ முதல்ல படி.


ஆரூர் ரங்
ஜன 30, 2025 13:29

என்னது? ஜாதி கொடுமையா? நடைமுறையில் அது எங்கு இல்லை? சச்சார் ஆணைய அறிக்கையில் 62 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சாதிகளைக் குறிப்பிட்டிருக்கிறார்..அதுஏற்றத்தாழ்வுஇல்லையா?. உருது பேசும் முஸ்லிம்கள் மற்ற மொழி பேசும் இஸ்லாமியர்களை தாழ்வாக நடத்துகின்றனர், உட்கார்ந்து சென்ற பின் அந்த இடத்தை கழுவி விடுகின்றனர் என்று பிரபல இஸ்லாமிய பேச்சாளர் பிஜே பேசும் வீடியோ இணையத்தில் உள்ளது. முழுமையான சமத்துவம் எந்த மதத்திலாவது உள்ளதா? தாயை தெய்வமாக போற்றும் கலாச்சாரம் நாம் பிறந்த நாட்டின் சனாதனத்தில் மட்டுமே உள்ளது.


ஆரூர் ரங்
ஜன 30, 2025 11:18

மனைவியை கணவன் குச்சியால் அடிக்கலாம் என்கிறது அரபிப் புத்தகம். பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு சொத்துரிமை கொடுத்தாலும் அதன் நிர்வாகம் பெரும்பாலும் ஆண்களிடம் தானுள்ளது. 99 சதவீத ஜமாஅத்களிலும் ஆண்கள் ராஜ்யம் மட்டுமே. அங்கே கூட ஒரு ஆணின் சாட்சியத்தை மறுக்க இரண்டு அல்லது மேற்பட்ட பெண்களின் சாட்சியம் அவசியமாம். கற்கால சட்ட திட்டங்களை வைத்திருப்பவர்கள் என்றாவது ஆண் பெண் சமத்துவத்தை ஏற்பார்கள் என எதிர்பார்க்கலாமா?


பேசும் தமிழன்
ஜன 30, 2025 11:06

பப்பு.... பப்பி.... கனி அக்கா... மணி அக்கா.... எங்கே இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.....


தமிழ்வேள்
ஜன 30, 2025 09:57

வேறு பக்கங்களிலும் சேர்த்து செய்துவிட்டதால் இப்படி...


AMLA ASOKAN
ஜன 30, 2025 09:31

பேசியவர் சலாம் என்பதால் சர்ச்சையாகிவிட்டது . இது தான் இன்றைய அரசியல் .


Barakat Ali
ஜன 30, 2025 08:39

அவர் பெண்ணினத்தை கேவலமாகப் பேசவில்லை .... சமம் என்று சொல்லமுடியாது என்றுதான் சரியாகச் சொல்லியிருக்கிறார் ....


பேசும் தமிழன்
ஜன 30, 2025 11:08

இதற்க்கு முட்டு கொடுக்க எப்படி மனது வருகிறது.... அந்தளவுக்கு மதம் எனும் மதம் பிடித்து இருக்கிறது.


Minimole P C
ஜன 30, 2025 08:10

What he says is correct. Until neither a man nor a woman cannot reproduce their offspring on their own individually these physical difference will lead to other disparities. What is required is love, care, regard and respects to each other which are almost every religion preaches in different level. Blindly saying equal is nonsence. Then why free bus, monthly freebees, maternity leave for 6 months, women are not allowed in Govt. offices beyond 6pm,requirement of women police to arrest them and you cannot arrest them beyond 6pm, why a separte jailor for women prisioners etc.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை