வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அருமை வரவேற்கிறேன்
கோரக்பூர்: ''நம் நாட்டிற்கு, 'முஸ்லிம் அரசியல்' தான் மிகப்பெரிய அச்சுறுத்தல்,'' என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., எனப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்கள் சங்கத்தின் நுாற்றாண்டு விழா உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: முஸ்லிம் அரசியலுக்கு எதிராக நம் முன்னோர்களான சத்ரபதி சிவாஜி, குரு கோவிந்த் சிங், மஹாராணா பிரதாப் மற்றும் மஹாராணா சங்கா ஆகியோர் போர்களில் ஈடுபட்டுள்ளனர். இப்போதும் முஸ்லிம் அரசியல் நம் நாட்டை துண்டாடுவதற்கு சதி செய்து வருகிறது. சங்கூர் பாபா வழக்கு இதற்கு சிறந்த உதாரணம். கடந்த ஜூலையில் கைதாவதற்கு முன் வரை, சட்டவிரோத மதமாற்ற நடவடிக்கையில் சங்கூர் பாபா ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சங்கூர் பாபா போன் றவர்களின் கூட்டு முயற்சியுடன், இந்த நாட்டை பிளவுப்படுத்த சதி நடந்து வருகிறது. மதமாற்றத்திற்காக சங்கூர் பாபா கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்து வருகிறார். அந்த பணம் எல்லாம் எங்கிருந்து வருகிறது? இவை எல்லாம் வெளிநாட்டில் இருந்து வரவில்லை. நாட்டு மக்களாகிய உங்களிடம் இருந்தே வருகிறது. ஏதேனும் ஒரு பொருளை வாங்கினால், அதில், 'ஹலால்' முத்திரை இருக்கிறதா என சோதித்து பாருங்கள். உத்தர பிரதேசத்தில் ஹலால் பொருட்களை தடை செய்து விட்டோம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். சோப்பு, துணிகள், தீக்குச்சிகளில் கூட ஹலால் முத்திரை குத்தப்படுகிறது. ஹலால் முத்திரை மூலம், 25,000 கோடி ரூபாய் அளவுக்கு நிதி திரட்டப்படுகிறது. இந்த பணம் அனைத்தும் பயங்கரவாதம், லவ் ஜிஹாத் மற்றும் மத மாற்றத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே தான் இதற்கு எதிராக மிகப்பெரிய பிரசாரத்தை உத்தர பிரதேசத்தில் துவக்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
அருமை வரவேற்கிறேன்