உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பொட்டு வைக்க தடை விதிப்பீர்களா? ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

பொட்டு வைக்க தடை விதிப்பீர்களா? ஹிஜாப் தடை வழக்கில் உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடில்லி: மும்பையில் கல்லூரி ஒன்றில் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பெண்கள் பொட்டு வைக்க தடை விதிப்பீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளது.மும்பையைச் சேர்ந்த என்ஜி ஆச்சார்யா மற்றும் டிகே மராத்தகா கல்லூரி வளாகத்தில் ஹிஜாப், நிஜாப் உள்ளிட்டவை அணிய தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து 9 மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.அப்போது நீதிபதிகள் கூறியதாவது: என்ன அணிய வேண்டும் எனக்கூறும் நீங்கள் எப்படி பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறீர்கள். பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதை அவர்களிடம் விட்டுவிட வேண்டும். அது அவர்களின் முடிவு. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, இதுபோன்று தடை விதிப்பது துரதிர்ஷ்டவசமானது. கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும். இந்த உத்தரவை தவறாக பயன்படுத்தக்கூடாது.முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனச் சொல்வது போல் மற்ற பெண்களை பொட்டு வைக்கக்கூடாது, திலகம் வைக்கக்கூடது என்று உங்களால் சொல்ல முடியுமா? அவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா? என கேட்டனர்.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், மனுதாரர்கள் கோரிக்கை ஏற்று ஹிஜாப் மற்றும் புர்கா அணிய அனுமதி வழங்கினால், மற்ற மாணவிகள், அரசியல் முயற்சியாக காவி நிறத்திலான ஷால் அணிவார்கள். இது நடக்கக்கூடாது. 441 முஸ்லிம் மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். அவர்களுக்கும் மற்று மாணவிகளுக்கு இடையே வேறுபாடு ஏற்பட்டுவிடக்கூடாது. ஹிஜாப் மற்றும் புர்காவை மாற்ற தனி அறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றார்.இதற்கு நீதிமன்றம், ‛‛ நீங்கள் சொல்வது சரி. ஆனால், அவர்களின் குடும்பத்தினர் அணிய கூறுகின்றனர். அதனால், அவர்கள் அணிகின்றனர். ஆனால், அனைவரும் ஒன்றாக படிக்க வேண்டும் என தெரிவித்தது.தொடர்ந்து கல்லூரி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களின் மதம் வெளிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதற்கு நீதிமன்றம், மாணவர்களின் பெயர் மூலம் அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்துவிடுமே அப்படியானால், அதற்கு மாற்றாக எண்களை வைத்து அழைப்பீர்களா? மத பேதமின்றி அனைத்து மாணவர்களும் இணைந்து படிக்க வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்தது.அதேநேரம், உடலை முழுமையாக மறைக்கும் வகையிலான பர்தா போன்ற ஆடைகளை மாணவிகள் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை தொடரும் என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை நவ.,மாதம் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 47 )

sankari n
செப் 03, 2024 19:03

அந்த அறிவு இருந்தால்..இழர் ஏன் கொலீஜியம் நீதிபதி ஆகிறார்??


Mahadevan Ramanan
ஆக 11, 2024 14:59

உச்ச நீதி மன்றத்தின் கருத்துக்களை எதிர்க்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.


C. Sorna Rajeswari
ஆக 10, 2024 23:01

தமிழ்நாட்டில் சில மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் பொட்டு வைக்க கூடாது வளையல் போட கூடாது என்று விதிமுறைகள் உண்டு என்று உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்கு தெரியாதா? சோ sad.....


Training Coordinator
ஆக 11, 2024 17:33

நீங்களும் கேஸ் போடுங்க


1968shylaja kumari
ஆக 10, 2024 09:09

‛ நீங்கள் சொல்வது சரி. ஆனால், அவர்களின் குடும்பத்தினர் அணிய கூறுகின்றனர். அதனால், அவர்கள் அணிகின்றனர்.????? ஆம் என் குடும்பத்தில் கூட பஞ்சகச்சம், மடிசார் புடவை கட்டச்சொல்கின்றனர் அதற்கு என்ன பதில்


1968shylaja kumari
ஆக 10, 2024 09:02

செய்தித்தாளில் பெயர் வர வேண்டும் மேலும் ஆடைக்கட்டுப்பாடு விஷயத்தில் பொட்டு எங்கிருந்து வந்தது . பொட்டு நைல் போலிஷ் ஐப்ரோ போன்றவை வேறு என்பதுகூட தெரியவில்லை. அதாவது பொட்டு என்றால் இந்துக்களை தாக்குவது . இது இப்போது ஒரு ட்ரெண்ட்


Anantharaman Srinivasan
ஆக 10, 2024 00:34

கேள்வியெல்லாம் பலமா கேட்ட நீதிபதிகள் கடைசியில் தடை தொடரும் அறிவித்து வழக்கை.. தள்ளிவைத்ததேன்.


சுலைமான்
ஆக 09, 2024 23:36

இது போன்ற நீதிபதிகளால்தான் இந்தியாவால் நினைத்ததை செய்ய முடியல! குற்றவாளிகள் பக்கம் நின்றே பேசும் நீதிமன்றம். நீதிபதிகள் அதிகமாக லெப்டிஸ்ட்களாக உள்ளனர்.


Ramesh Sargam
ஆக 09, 2024 23:05

பொட்டுவைப்பதால் முகம் மறையாது. மாறாக மிகப்பொலிவுடன் இருக்கும். ஆனால் ஹிஜாப் அணிவதால் முகம் மறையும். ஆள் மாறாட்டம் ஏட்பட அதிக வாய்ப்புண்டு கணம் கோர்ட்டார் அவர்களே...


Parthasarathy Badrinarayanan
ஆக 09, 2024 22:49

மத வேறுபாடு கூடாது என்பதற்காகத்தான் சீருடை என்பதை அந்த நீதிபதியிடம் சொல்லவில்லையா? இத்தனை வருடங்கள் போடாது முக்காடு இப்போது போடுவது ஏன் என அந்த நீதிபதி கேட்டிருந்தால் நியாயம். பொட்டு, கயிறு கூடக் கூடாதுன்னு இங்கு ஒரு முன்னாள் அறிக்கை தருகிறார்.


kulandai kannan
ஆக 09, 2024 21:52

நீதிபதிகளுக்கும், வக்கீல்களுக்கும் உடை கோட்பாடு தேவையில்லை என்று சொல்வார்களா நீதிபதிகள்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை