மேலும் செய்திகள்
காங்., மூத்த தலைவருக்கு பா.ஜ., பகிரங்க அழைப்பு
22-Sep-2024
வதந்தி பரப்பாதீங்க!காங்கிரஸ் மேலிட தலைவர்களுடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நான் பா.ஜ.,வில் சேரப் போவதாக தொடர்ந்து வதந்திகள் பரப்பப்படுகின்றன. எத்தனை முறை மறுத்தாலும் திரும்ப திரும்ப இந்த வதந்தியை திட்டமிட்டு பரப்புகின்றனர். குமாரி செல்ஜாஎம்.பி., காங்கிரஸ்ஆட்சி நடத்த முடியாது!காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ஹிமாச்சல பிரதேசத்துக்கு மத்திய அரசு அதிகமான நிதியை வாரி கொடுக்கிறது. மத்திய அரசின் ஆதரவு, உதவி இல்லாமல், காங்கிரசால் அங்குஒரு நாள் கூட ஆட்சி நடத்த முடியாது. அம்மாநில அரசு இதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும். நட்டாதேசிய தலைவர், பா.ஜ., கேள்விக்குறியான எதிர்காலம்ஹரியானாவில் போதை பொருள் கடத்தல் அதிகரித்து விட்டது. வேலையில்லா திண்டாட்டமும் தலைவிரித்தாடுகிறது. அம்மாநில பா.ஜ., அரசால் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை. இங்குள்ள இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டது. ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ்
22-Sep-2024