தேசியம் பேட்டி
துாக்கியெறிய வேண்டும்!ஹரியானாவில், 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பா.ஜ., மக்களின் நலனுக்காக எதையுமே செய்யவில்லை. விவசாயிகள், இளைஞர்கள் என அனைத்து பிரிவினரையும் அக்கட்சி ஏமாற்றி உள்ளது. அரசியலமைப்பை மாற்றப் போவதாகக் கூறும் பா.ஜ.,வை, ஆட்சி அதிகாரத்தில் இருந்து துாக்கியெறிய வேண்டும்.பிரியங்காபொதுச்செயலர், காங்கிரஸ்ஊழல் என்றாலே காங்.,!அசாமில் காங்., ஆட்சி நடந்த போது, லஞ்சம் கொடுக்காமல் ஒருவர் கூட அரசு வேலை பெற்றதில்லை. குறைந்த ஊதியத்துடன் கூடிய வேலைக்கு கூட, 1 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டது. லஞ்சம், ஊழல் என்றாலே அது காங்., தான்.ஹிமந்த பிஸ்வ சர்மாஅசாம் முதல்வர், பா.ஜ.,ஹிட்லருக்கு பின் நெதன்யாகு!இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பாலஸ்தீனத்தில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று விட்டு, தற்போது லெபனானிலும் அதையே செய்கிறார். இது, அவர் குற்றவாளி என்பதை நிரூபிக்கிறது. ஹிட்லருக்கு பின், நெதன்யாகு தான் மிகப்பெரிய பயங்கரவாதி.மெஹபூபா முப்திதலைவர், மக்கள் ஜனநாயக கட்சி