உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி

தேசியம் பேட்டி

கூட்டாட்சிக்கு எதிரானதல்ல!ஒரே நேரத்தில் லோக்சபா மற்றும் சட்டசபைக்கு தேர்தல் நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது கிடையாது. சுதந்திரம் பெற்ற பின் நடந்த 1952, 1957 மற்றும் 1962 தேர்தல்கள் சட்டசபைக்கும், லோக்சபாவுக்கும் சேர்த்தே நடந்தன. தற்போது மட்டும் அது எப்படி கூட்டாட்சிக்கு எதிரானதாக இருக்கும்? அர்ஜுன் ராம் மேக்வால்மத்திய அமைச்சர், பா.ஜ.,பெண்களை அவமதித்துவிட்டார்!பீஹார் பெண்கள் முன்பு நல்ல ஆடை அணியவில்லை. தான் ஆட்சிக்கு வந்த பின் தான் நல்ல உடை உடுத்துகின்றனர் என முதல்வர் நிதிஷ் குமார் பேசியிருப்பது, பீஹார் பெண்களை அவமதிக்கும் செயல். அவர்கள் எப்போதும் சுயமரியாதையுடனும், சொந்தக்காலிலும் நிற்பவர்கள். தேஜஸ்வி யாதவ்தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்முட்டாளாக்கும் கணக்கெடுப்பு!நாட்டின் 90 சதவீத மக்கள்தொகையில் தலித்துகள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளனர். ஆனால் அரசில் அவர்களுக்கு பெரிய அளவில் அங்கீகாரம் இல்லை. இதனால் தான் ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோருகிறோம். ஆனால் பீஹாரில் எடுத்த கணக்கெடுப்பு மக்களை முட்டாளாக்கும் செயல். ராகுல்லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !