தேசியம் பேட்டி
பொருளாதார வீழ்ச்சி!மோடி ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, உற்பத்தி துறையின் பங்கு குறைந்து உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் முன்னேற்றம் அடையும் போது தான், நாடு உண்மையான பொருளாதார வளர்ச்சி அடையும்.ராகுல்லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,நட்புடன் வாழ வேண்டும்!மணிப்பூரில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பழங்குடியினரும் நட்புடன் இணைந்து வாழ வேண்டும். எந்த பிரச்னையாக இருந்தாலும் பேச்சு வாயிலாக தீர்வு காணலாம். அனைத்து சமூகங்களும் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.பைரேன் சிங்மணிப்பூர் முதல்வர், பா.ஜ., நாடகமாடும் கெஜ்ரிவால்!தேர்தல் நேரங்களில் மட்டும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை ஹிந்துவாக காட்டி கொள்கிறார். அவருக்கு ஹிந்து மதத்துடனும், சனாதனத்துடனும் எந்த தொடர்பும் இல்லை. ஓட்டுக்காக கெஜ்ரிவால் நாடகமாடுகிறார்.மனோஜ் திவாரிலோக்சபா எம்.பி., பா.ஜ.,