உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி: நவ. 21

தேசியம் பேட்டி: நவ. 21

பொருளாதாரத்திற்கு ஆபத்து!

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நாட்டின் அனைத்து வளங்களையும் முதலாளித்துவ நண்பர்களிடம் ஒப்படைத்து, சிறு வணிகர்களின் முதுகெலுப்பை உடைத்துவிட்டது. ‘மேக் இன் இந்தியா’ சீனாவில் இருந்து வாங்குங்கள் என்பதாக மாறிவிட்டது. இது, இந்திய பொருளாதாரத்திற்கு ஆபத்து.- மல்லிகார்ஜுன கார்கேதேசிய தலைவர், காங்கிரஸ்

பார்லி.,யை நடத்த முடியாது!

மத்திய அரசு, எதிர்க்கட்சிகளை எதிர்கொள்ள பயந்து, பார்லி குளிர்கால கூட்டத்தொடரை நடத்தாமல் தள்ளிப்போடுகிறது. மத்திய அரசால், நவம்பர் மாதத்தில் ஒரு நாள் கூட பார்லி.,யை நடத்த முடியாது. என் கணிப்பு தவறாக மாறினால், நிச்சயம் நான் மகிழ்ச்சி அடைவேன்.- டெரெக் ஓ பிரையன்ராஜ்யசபா எம்.பி., திரிணமுல் காங்., கட்சி

பேச்சுக்கே இடமில்லை!

பாகிஸ்தானுடனான, இந்தியாவின் இருதரப்பு உறவில் எந்த மாற்றமும் இல்லை. பயங்கரவாதத்தை கைவிடும் வரை பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வாய்ப்பே இல்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிற்கு வரும்படி பாகிஸ்தானுக்கு எந்தவொரு சிறப்பு அழைப்பும் மத்திய அரசு விடுக்கவில்லை.- நலின் கோலிசெய்தித்தொடர்பாளர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி