உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசியம் பேட்டி: அக். 17

தேசியம் பேட்டி: அக். 17

மிகப்பெரிய சதி!

கரப்பான்பூச்சி கட்சியினரின் போராட்டம், வெளிநாட்டு கோடீஸ்வர தொழிலதிபர் எலான் மஸ்கின் தூண்டுதல் பேரிலேயே நடத்தப்படுகிறது. இது, நம் நாட்டிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய சதி; அரசியல் அமைப்புகளை சீர்குலைக்க நடக்கும் முயற்சி. இதற்கு முன் இதுபோல் போராட்டங்கள் நடந்ததே இல்லை.- பிரிஜ்பூஷன் சரண் சிங்முன்னாள் எம்.பி., – பா.ஜ.,

தயங்குவது ஏன்?

ஒரு வெளிநாட்டு தொழிலதிபர் மோடியை விமர்சிக்கிறார். நாட்டின் முடிவெடுக்கும் அதிகாரத்துக்கு சவால் விடுகிறார். இங்குள்ள வளங்களை பயன்படுத்துவது குறித்து அவர் கட்டளையிடுவதை ஏற்க முடியாது. அவருக்கு பதிலளிக்க மத்திய அரசும், பா.ஜ.,வும் தயங்குவது ஏன்? எலான் மஸ்க்கை கண்டு பயப்படுவது ஏன்?- அசாதுதீன் ஓவைசிலோக்சபா எம்.பி.,ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சி

மன்னிக்கவே வேண்டாம்!

நகர்ப்புற நக்சல்களுக்கும், தேசபக்தி நிறைந்தவர்களுக்கும் இடையே போர்க்களம் உருவாக்கப்பட்டுள்ளது. இது, அரசியலமைப்பை நம்புபவர்களுக்கும், அராஜகவாதிகளுக்கும் இடையிலானது. மக்களே, எதிரிகளை ஒருமுறை மன்னியுங்கள்; நண்பர்களை இருமுறை மன்னியுங்கள். துரோகிகளை ஒருபோதும் மன்னிக்க வேண்டாம்.- கிரண் ரிஜிஜுமத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !