தற்போதைய மந்திரம்!
இன்று புதிதாக தோன்றும் ஒரு தொழில்நுட்பம், அடுத்த நான்கு ஆண்டுகளில் பழையதாகி விடும். இது வேகத்திற்கு ஏற்ப நாம் மாற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. போர்க்களத்தில், வலிமையானவர்களுக்கே வெற்றி என்பது பழைய காலம்; வேகமானவர்களுக்கே வெற்றி என்பதே தற்போதைய மந்திரம். ராஜ்நாத் சிங் ராணுவ அமைச்சர், பா.ஜ.,உரிமையை பறிக்க சதி!
புதிய வேலை உறுதி சட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் உரிமையை பறிக்கவும், கிராம பஞ்சாயத்துகளை முடக்கவும் மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், நாட்டை மீண்டும் பழைய மன்னர் காலத்திற்கு தள்ளி, அதிகாரம் மற்றும் செல்வத்தை சிலரின் கைகளில் மட்டும் சேர்க்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. ராகுல் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், காங்.,வரம்பு மீறிய செயல்!
உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. அதே சமயம், அம்மாநில அரசு சுவாமி அவிமுக்தேஸ்வரானந்தாவிடம், சங்கராச்சாரியார் என்பதற்கான ஆதாரத்தை கேட்பது வரம்பு மீறிய செயல்; முறையற்றது. இந்த விவகாரத்தில் இரு தரப்பினரும் பேசி சுமுக தீர்வு காண வேண்டும். உமா பாரதி மூத்த தலைவர், பா.ஜ.,