உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகள்: 6 வாரத்தில் இடத்தை தேர்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகள்: 6 வாரத்தில் இடத்தை தேர்வு செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான இடங்களை ஆறு வார காலத்திற்குள் கண்டறிய வேண்டும்,'' என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, குமாரி மகா சபா என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=h0tm8lz2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த பள்ளிகள், தமிழ் கற்றல் சட்டம், 2006ஐ மீறாது எனக்கூறி, இரண்டு மாதங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும், 240 மாணவர்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்கும்படி 2017, செப்., 11ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, 2017, டிச., 11ல் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. பின் பல ஆண்டுகள் இந்த வழக்கு விசாரிக்கப்படாமலேயே இருந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த 2ம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் விசாரணைக்கு பிறகு வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதி நாகரத்னா நீங்கள் நமது இந்திய குடியரசின் அங்கம் இல்லையா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பினார்.இதனைத் தொடர்ந்து நீதிபதிகள், எங்கள் மாநிலம், எங்கள் அரசு எனு தயவு செய்து யாரும் சொல்லாதீர்கள். இது கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறக்கூடிய நாடு. இங்கு மத்திய அரசு, மாநில அரசும் எல்லா விஷயத்திலும் அமர்ந்து பேசி தீர்வை கொண்டு வர வேண்டும் என்றார்.அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ஹிந்தி திணிப்பை செய்வதால் இந்த திட்டத்தை எதிர்ப்பதாக தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ராகரத்னா, தயவு செய்து தமிழகத்தில் மாணவர்களை அழுத்தத்துக்கு உள்ளாக்காதீர்கள் என கருத்து தெரிவித்தார்.இதற்கு வில்சன்,' தயவு செய்து தமிழகத்தில் அவ்வாறு நடப்பதாக சொல்லாதீர்கள். நாட்டிலேயே அதிகளவில் மாணவர்கள் பள்ளி சேர்க்கையை தமிழக அரசு தான் மேற்கொண்டு வருகிறது என்றார்.நீதிபதி நாகரத்னா: மத்திய அரசிடம் கல்வி நிதி பெறுவதில் சிக்கல் இருக்கிறது என்றால் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மத்திய அரசை அணுகிபேச்சுவார்த்தை நடத்த வேண்டியதுதானே.தமிழக அரசு அதிகாரிகளை மத்திய அரசிடம் அனுப்பி பேச வைக்க வேண்டியதுதானே என்றார்.தொடர்ந்து, நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைப்பதற்கான இடங்களை 6 வார காலத்துக்குள் கண்டறியும்படி தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 49 )

Mennon Kasirajam
டிச 16, 2025 14:18

திமுக அரசாக கருணாநியிலிருந்து ஸ்டாலின். வரை இந்தி மொழியை பாடத்திட்டத்தில் சேர்த்து கற்பிக்கும் பல லட்சம் பள்ளிகளுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கொடுத்திருக்கிறது..அப்பள்ளிகளுக்கு இலவசமாக நிதியும் மானியமாக தமிழக அரசே வழங்குகிறது. ஏதற்கு மத்திய அரசுக்கு தடைவிதிக்கிறது


sivaram
டிச 16, 2025 10:36

விடியல் சார் திருந்த வாய்ப்பே இல்லை காரணம் அவரை சுற்றி இருப்பவர்கள் , விடியல் சார் அவர் அப்பாவை போல் எப்பொழுது சுயமா சிந்திப்பாரோ அன்றுதான் உண்மையான விடியல்


Narasimmabharathi S
டிச 16, 2025 08:00

வரவேர்க்கதக்கது


Chinnalagu Tholkapiyan
டிச 16, 2025 06:23

இந்தியா முழுமைக்கும் பொதுவான ஒரு மொழி வேண்டும் என்றால் ஏன் அது உலகம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆங்கிலமாக ஏன்இருக்கக் கூடாது இந்தி மட்டுமே பயின்று வரும் வட இந்தியர்களும் இந்தி பேசும் மாநில மக்களும் ஏன் உலகளவில் தங்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக கற்று தேசிய ஒருங்கிணைப்பிற்கு இதுதான் சரியான வழியாக இருக்க முடியும் என்பதை உச்ச நீதிமன்ற நீதி அரசர் ஏன் கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. நியாயமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயை போராடித்தான் பெறவேண்டும் என்று உச்சச நீதிமன்றத்தின் நீதி அரசர் விரும்புகிறாரா? இது இந்திய கூட்டாட்சி தத்துவத்திற்கு சரியானதா என்பதை ஏன் கருத்தில் கொள்ளவில்லை?


Kasimani Baskaran
டிச 16, 2025 04:14

திமிர் பேச்சு பேசுவதில் இவன் சூரன்.


Edi Shivaji
டிச 15, 2025 23:10

இந்தி திணிப்பு இந்தி திணிப்பு என்று எதை கேட்டாலும் வழக்கறிஞர் வில்சன் கூறுகிறாரே அவரது தலைவரும் ராகுல் காந்தியும் எப்போதும் தங்கள் கைவசம் இந்திய அரசியல் சட்ட காபி வைத்துக்கொண்டு இதை பிஜேபியிடமிருந்து காப்பாற்றுவோம் என்று சூளுரைத்து வருகிறார்களே அந்த சட்டத்தில் என்ன இருக்கிறது என்று படித்து இருக்கிறாரா? அதில் இந்த நாட்டின் அரசியல் மொழியாக இந்தியும் ஆங்கிலமும் இருக்கும் என்று இருக்கிறதே. அப்புறம் எப்படி இந்தி திணிப்பு வரும். நீதிபதி சரியாக தான் கேட்டு இருக்கிறார், நீங்கள் இந்தியாவில் தான் இருக்கிறீர்களா அல்லது தனி நாடா என்று.


senthilanandsankaran
டிச 15, 2025 23:04

சரியாக தமிழ் படிக்க எழுத தெரியாத 60 சதவீத மாணவர்களை உருவாக்கிய திராவிட வேஷதாரிகள்...சுப்ரீம் கோர்ட்ல் பொய் சொல்லும் ஒரு வக்கில்...இதை தமிழக மக்கள் உற்று கவனிப்பார்கள்....ஒரு தரமான இலவச கல்வியை தங்களின் சுய லாபத்திற்கு மாணவர்களின் எதிர்காலத் பாழாக்கும் திமுக.


C.SRIRAM
டிச 15, 2025 22:12

திருட்டு திராவிடத்துக்கு சம்மட்டியடி


ஆரூர் ரங்
டிச 15, 2025 21:53

ஜவஹர் என்பது அரபியிலிருந்து தோன்றிய பெயர். ரத்தினம் எனப் பொருள். சிறுபான்மை வாக்குவங்கிக்காகவாவது திமுக ஆதரிக்கலாமே.


உண்மை கசக்கும்
டிச 15, 2025 21:51

கலைஞர் கருணாநிதி நவோதயா பள்ளி என்று பெயர் வைக்கலாம்


M S RAGHUNATHAN
டிச 16, 2025 10:46

ஆமாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை