உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் பதிலடி; கடற்படை தளபதி எச்சரிக்கை

இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் பதிலடி; கடற்படை தளபதி எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்தியாவை யாரும் அச்சுறுத்தினால், கடும் பதிலடியை எதிர்கொள்ள நேரிடும் என இந்திய கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ராணுவத்தினர் கொடி தினத்தை முன்னிட்டு கடற்படைத் தளபதி அட்மிரல் திரிபாதி கூறியதாவது: டில்லியில் மத்திய ஆயுதப்படை வாரியத்தால், இன்று நடத்தப்பட்ட நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. ஏற்பாட்டாளர்களை வாழ்த்துகிறேன். டில்லியின் துணைநிலை கவர்னர், முதல்வர் மற்றும் வாரியத்திற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சங்க உறுப்பினர்கள் மற்றும் குழந்தைகளை சந்தித்தது மகிழ்ச்சியளிக்கிறது. சமூகத்தின் பிற மக்களைச் சந்திக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் குழந்தைகளின் நிகழ்ச்சியைக் கண்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நமது ஆயுதப்படைகள், ராணுவம், கடற்படை, விமானப்படை தொடர்ந்து பெருமையுடன் தேசத்திற்கு சேவை செய்கின்றன. ஆபரேஷன் சிந்தூர் போன்ற நடவடிக்கைகள் நமது உறுதியைக் காட்டுகின்றன. இந்தியாவை யாரும் அச்சுறுத்தினால், கடும் பதிலடியை எதிர்கொள்ள நேரிடும். இதை ஆபரேஷன் சிந்தூரின் போது நாங்கள் நிரூபித்தோம், எதிர்காலத்திலும் அதை நிரூபிப்போம்.ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தாலும், அது இன்னும் முடிவடையவில்லை. அந்த நேரத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்த நாட்டின் மக்கள் ஆயுதப்படைகளைப் பற்றி பெருமைப்படுகிறார்கள் என்பதை நான் உணர்கிறேன். இவ்வாறு கடற்படை தளபதி அட்மிரல் திரிபாதி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பாலாஜி
டிச 07, 2025 17:55

முதலில் இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கடலில் கைது செய்து அவர்கள் படகுகளை பறிமுதல் செய்வதை நிரந்தரமாக தடுத்து இந்திய கடற்படையின் கடமையை நிலைநாட்டு.


vivek
டிச 07, 2025 18:33

அதற்கு முதலில் கச்சதீவை தாரை வார்த்த திமுகவிடம் போய் கேளு


guna
டிச 07, 2025 18:35

கச்சதீவை தாரை வார்த்தவரிடம் போய் கேளு


rama adhavan
டிச 07, 2025 20:39

முதலில் ஸ்ரீலங்கா கடல் எல்லைக்குள் சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்று சொல்ல துணிவு உண்டா? சொன்னால் ஓட்டு போய் விடுமே.


oviya vijay
டிச 08, 2025 11:18

நீ என்ன 10 ரூவா கும்பலை சேர்ந்த வனா?


RAMESH KUMAR R V
டிச 07, 2025 16:44

ஜெய் ஹிந்த்.