வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முயற்சிக்கு வாழ்த்துக்கள்
புதுடில்லி: இந்தியக் கடற்படையின் தையல் கப்பலான ஐஎன்எஸ்வி கவுண்டின்யா, தனது முதல் சர்வதேசப் பயணத்தை தொடங்கி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார்.இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ள தையல் கப்பலான ஐஎன்எஸ்வி கவுண்டின்யா குஜராத்தில் உள்ள போர்பந்தரில் இருந்து ஓமனில் உள்ள மஸ்கட்டுக்கு இன்று (டிசம்பர் 29) பயணம் மேற்கொண்டுள்ளது. இது முதல் சர்வதேச பயணம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:ஐஎன்எஸ்வி கவுண்டின்யா போர்பந்தரிலிருந்து ஓமனின் மஸ்கட் வரை தனது முதல் பயணத்தைத் தொடங்குவதைப் பார்ப்பது மிகவும் அருமையாக இருக்கிறது. பண்டைய இந்திய தையல்- கப்பல் நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டப்பட்ட இந்தக் கப்பல், இந்தியாவின் வளமான கடல்சார் மரபுகளை எடுத்துரைக்கிறது. இந்த தனித்துவமான கப்பலை கட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றிய வடிவமைப்பாளர்கள், கைவினைஞர்கள், கப்பல் கட்டுபவர்கள் மற்றும் இந்திய கடற்படைக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளைகுடாப் பகுதியுடனும் அதற்கு அப்பாலும் நமது வரலாற்றுத் தொடர்புகளை வலுப்படுத்த பாதுகாப்பான மற்றும் மறக்கமுடியாத பயணத்திற்கு குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். அண்மையில் பிரதமர் மோடி ஓமன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
முயற்சிக்கு வாழ்த்துக்கள்