வாசகர்கள் கருத்துகள் ( 2 )
காட்டுல நக்ஸல்களை கொன்னுப் போடுங்க சரி, ஆனால் நாட்டுல இருக்கிற கேடி கம்மிகளை எப்ப துரத்த போறீங்க?
ஒருவனை சுட்டுக்கொன்றால் போதாது. கூண்டோடு ஒழிக்கவேண்டும்.
பெங்களூரு: நக்சல் தலைவன் விக்ரம் கவுடாவை, கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே தனிப்படை போலீசார் சுட்டுக்கொன்றனர். தப்பி ஓடிய நக்சலைட்டுகள் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே பாடகுண்டா என்ற இடத்தில் நக்சலைட்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் நக்சல் தலைவன் விக்ரம் கவுடா சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.இது குறித்து போலீசார் கூறியதாவது: கேரளாவில் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே நக்சலைட்டுகள் முகாமிட்டுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது என்றனர். கவுடா சமீப நாட்களாக சிருங்கேரி, நரசிம்மராஜபுரா, கார்கலா மற்றும் உடுப்பி பகுதிகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இந்த பகுதிகளில் நக்சலைட் நடவடிக்கை அதிகரித்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
காட்டுல நக்ஸல்களை கொன்னுப் போடுங்க சரி, ஆனால் நாட்டுல இருக்கிற கேடி கம்மிகளை எப்ப துரத்த போறீங்க?
ஒருவனை சுட்டுக்கொன்றால் போதாது. கூண்டோடு ஒழிக்கவேண்டும்.